39 முதல் சுற்றுலா
கதவருகில் நந்தினி இல்லாததை பார்த்து கள்ளப் புன்னகை பூத்தாள் வைஷாலி. ஆனால் அவளது புன்னகை மாயமாய் மறைந்தது, விக்ரம் அவளை தன்னை நோக்கி இழுத்துக் கொண்ட போது.
"எங்க அவ்வளவு வேகமா ஓடின?" என்றான் குழைவாய்.
"நான் வந்து ( சற்று யோசித்துவிட்டு ) கப்போர்டில் இருந்து துணி எடுக்க போனேன்" என்று சமாளித்தாள்.
"அவ்வளவு என்ன அவசரம்?"
"நீங்க பாத்ரூம்ல இருந்து வெளிய வரதுக்கு முன்னாடி, இந்த ரூமை விட்டு ஓடிப் போயிடணும்னு நினைச்சேன்"
"ஏன்? "
"உங்களை இப்படி அரை நிர்வாணமா பார்க்காம இருக்கத்தான்" என்று சிரிப்பை அடக்கியபடி கூறினாள்.
அவள் தன்னை நையாண்டியை செய்வதை பார்த்து வாயைப் பிளந்து கொண்டு நின்றான் விக்ரம். சிரித்து கொண்டே அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு ஓடிப்போனாள் வைஷாலி.
அவள் வெளியே செல்ல கதவைத் திறந்த போது, அவர்கள் அறைக்கு வந்தார் கோப்பெருந்தேவி.
"வாங்கம்மா" என்று அவருக்கு வழி விட்டு ஒதுங்கி நின்றாள் வைஷாலி.
சிரித்தபடி உள்ளே நுழைந்தார் கோப்பெருந்தேவி. அவசரமாய் ஒரு சட்டையை எடுத்து, அதற்குள் புகுந்து கொண்டான் விக்ரம்.
"உங்ககிட்ட ஒரு விஷயம் பேசலாம்னு வந்தேன்"
"சொல்லுங்க ஆன்ட்டி"
"கல்யாணம் எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுச்சி"
விக்ரமும் வைஷாலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நான் இங்கிருந்து கெளம்புறது நல்லதுன்னு நினைக்கிறேன்"
"ஏன் ஆன்ட்டி? "
"இல்ல விக்ரம்... எங்க உயிருக்கு ஆபத்து இருந்தது. அதனால தான் இங்க இருக்க நான் ஒத்துக்கிட்டேன். இப்போ வைஷு உங்ககூட இருக்கா. இனிமே எந்த பிரச்சனையும் இல்ல. அவளை நீங்க பார்த்துக்குவீங்க"
VOUS LISEZ
உறவாய் வருவாய்...! (முடிந்தது)
Roman d'amourஅவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்கள...