19 ஒப்பந்தம்
மறுநாள் காலை
கோப்பெருந்தேவியும், வைஷாலியும் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். அது அவர்கள் எப்பொழுதும் ஒன்றாய் செய்வது தான். கோப்பெருந்தேவி, வேலைக்கு செல்லும் பெண்மணி என்பதால், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் தன் மகளுடன் இருக்கத் தவறுவதில்லை. அப்படித் தான் அவர் தன்னுடைய நேரத்தை வகுத்து வைத்திருந்தார்.
"நான் என்ன செய்யணும்னு நினைக்கிறே?" என்றார் தேநீரைக் குடித்து முடித்து கோப்பையை கீழே வைத்துவிட்டு.
"எதுவா இருந்தாலும் நீங்க சொல்லுங்க, மா" என்றாள் வைஷாலி.
"நந்தினி தேவி ரொம்ப கன்னிங்காணவங்க. அவங்களை எதிர்த்து நிற்கிறது அவ்வளவு சுலபம் இல்ல. அது வீராதித்தனே தோத்துப் போன விஷயம்."
அவர் பேசுவதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் வைஷாலி.
"சாவித்திரி தேவியும், சின்ன முதலாளியும் உன் பக்கம் நிப்பாங்க அப்படிங்கறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. ஆனா, அவங்களுடைய உலகம் முற்றிலும் வித்தியாசமானது. அவங்களுடைய ஸ்டேட்டஸ், அவங்களுடைய லைஃப் ஸ்டைல், அவங்களுடைய பழக்கவழக்கங்கள், எல்லாமே புதுசாவும் உனக்கு சங்கடமாவும் இருக்கும். நீ உன்னுடைய சுதந்திரத்தை முழுசா இழப்ப"
"நீங்க சொல்றது உண்மை தான். எனக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி தான் இருக்கும். ஆனா நீங்க என்னை *கைட்* பண்ண மாட்டீங்களா?"
"என்னால என்ன செய்ய முடியும் வைஷாலி?"
"உங்களால என்ன வேணாலும் செய்ய முடியும் மா. நீங்க ஆரம்பத்துல இருந்த மாதிரி இப்போ இல்ல. எவ்வளவோ மோசமான காலகட்டத்தை எல்லாம் கடந்து வந்திருக்கீங்க. யாரோட ஹெல்ப்பும் இல்லாம, என்னை வளத்து ஆளாக்கி இருக்கீங்க. உங்களை நீங்களே செதுக்கிகிட்டு இருக்கீங்க. நீங்க தாம்மா என்னுடைய பலம். ஒவ்வொரு நாளும், பல தரப்பட்ட ரோடுசைடு ரோமியோக்களை கடந்து வர்ற எனக்கு தெரியும், ஒரு பொம்பள இந்த சமுதாயத்துல தனிச்சி வாழறது எவ்வளவு கஷ்டம்னு. உங்களை கடிச்சி குதற நினைச்ச எத்தனை மனுஷ மிருகங்களை நீங்க கடந்து வந்திருப்பீங்க? அதையெல்லாம் தாண்டி நீங்க ஜெயிச்சிருக்கீங்க... இவ்வளவு போராட்டத்தை கடந்து, ஜெயிச்சி வந்த உங்களால, நந்தினி தேவியை ஜெயிக்க முடியாதா?"
![](https://img.wattpad.com/cover/303029081-288-k552470.jpg)
ESTÁS LEYENDO
உறவாய் வருவாய்...! (முடிந்தது)
Romanceஅவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்கள...