37 தலையில் இறங்கிய இடி
காபியை குடித்து முடித்த விக்ரம், தம்ளரை கீழே வைத்துவிட்டு,
"வைஷு, நீ ரொம்ப டயர்டா இருக்க. வா என் கூட"
வைஷாலி சாவித்ரியை பார்க்க, அவர் *போ* என்பது போல் சைகை செய்தார். முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு, சரி என்று தலையசைத்து விட்டு அவனுடன் சென்றாள் வைஷாலி. பாவம் அவள்... அவர்களது முதலிரவு முடிந்திருக்கிறது என்றால், அவள் சோர்வாக தானே இருப்பாள்? என்று எண்ணினார் சாவித்திரி.
வைஷாலியை சற்று தொலைவாய் அழைத்து வந்தான் விக்ரம்.
"இங்க உட்காரு"
நல்ல பெண்ணைப் போல் அங்கு அமர்ந்து கொண்டாள் வைஷாலி. அவளுக்கு தெரியும் விமலாதித்தனும் சாவித்திரியும் அவர்களைத் தான் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.
"இந்த சேர் உனக்கு கம்ஃபர்டபிலா இருக்கும். கொஞ்ச நேரம் தூங்கு" என்றான் விக்ரம்.
சரி என்று தலையசைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள் வைஷாலி. அவளைப் பார்த்து அன்பாய் புன்னகைத்தான் விக்ரம். அவர்களை பார்த்துக் கொண்டிருந்த விமலாதித்தன் பெருமூச்சு விட்டார். சாவித்திரியின் பக்கம் வந்து அமர்ந்து கொண்டார்.
"என்ன சொன்னான் உன் பையன்?"
"என்னத்த சொல்றது? அவன் எவ்வளவு ஆர்வமாக இருந்தான்னு நமக்கு தான் தெரியுமே..."
"உண்மை தான். நம்ம அவனை குறை சொல்ல முடியாது"
"அவனை எப்படி நீங்க குறை சொல்லுவீங்க? அவன் உங்களை மாதிரி தானே இருப்பான்?" என்று அவர் காலை வாரினார் சாவித்திரி.
"நாங்க காதலிச்சவங்களே மனைவியா வந்தா, நாங்களும் என்ன தான் செய்ய முடியும்?" என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறினார் விமலாதித்தன்.
"நம்ம ஹாஸ்பிடல்ல இருக்கோம். மறந்துடாதீங்க" என்றார் சாவித்திரி.
முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு நேராய் அமர்ந்து கொண்டார் விமலாதித்தன். தான் சிரிப்பதை யாரும் பார்க்காமல் இருக்க, தன் சேலைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டார் சாவித்திரி. அவர்களது பார்வை சற்று தொலைவில் அமர்ந்திருந்த விக்ரம், வைஷாலியின் மீது விழுந்தது. வைஷாலி தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள். அவளை மெல்ல தன் மடியில் சாய்த்துக் கொண்டு, அவன் தலையை வருடிக் கொடுத்தான் விக்ரம். விமலாதித்தனின் சாவித்திரியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.
ESTÁS LEYENDO
உறவாய் வருவாய்...! (முடிந்தது)
Romanceஅவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்கள...