1 விக்ரமின் வருகை
கப்பலை போல் மிதந்து வந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் இருந்து மிதப்புடன் தனது அரண்மனை போன்ற வீட்டின் முன் இறங்கினான் விக்ரம். பேண்ட் வாத்திய முழக்கத்துடன் அவன் வரவேற்கப்பட்டான். அந்த பேண்ட் வாத்திய கோஷ்டியை நோக்கி கையை உயர்த்தி,
"எனக்கு சத்தம் போட்டா பிடிக்காது" என்றான் உணர்ச்சி இல்லாமல்.
அவனுடைய பேச்சில் தெரிந்த ஆளுமையை கவனித்தபடி நின்றிருந்த நந்தினி தேவியை அனைவரும் பார்த்தார்கள். அவருக்கு பெருமையாய் இருந்தது. ராஜ ரத்தம் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும். அவருக்கு இது தான் வேண்டும். இதற்காகத் தானே அவர் அவனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்...! அமெரிக்கா போன்ற நாட்டில் வாழ்ந்தால், தன்னைப் பற்றிய உயரிய எண்ணத்தின் சாயலுடன் அவன் வளர்வான் என்று அவர் எண்ணினார். தங்கள் குடும்ப கவுரவம் எப்படிப்பட்டது என்ற எதார்த்தத்தையும் அவன் உணர்ந்து கொள்வான். அப்படிப்பட்ட ராஜ வாழ்க்கை வாழ்ந்த பிறகு, ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து பெண்ணை நினைத்து கூட பார்க்க மாட்டான், என்று கணக்குப் போட்டார் ராணி நந்தினி தேவி.
"உன்னுடைய ஜர்னி பெட்டரா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்" என்றார் நந்தினி சம்பிரதாயமாக.
ஆமாம் என்று அவனும் சம்பிரதாயமாகவே தலையசைத்தான். அவனை கட்டி அணைத்து வரவேற்றார் விக்ரமின் அப்பா விமலாதித்தன்.
"வெல்கம் பேக்"
"எப்படி இருக்கீங்க டாட்? "
"டூயிங் கிரேட் "
விமலாதித்தனுக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சாவித்திரிக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கவில்லை விக்ரம்.
"போய் குளிச்சிட்டு வா. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்" என்றார் நந்தினி.
"இல்ல பாட்டி. நான் ஃபிளைட்டில் சாப்பிட்டேன். ஐ அம் ஃபுல்" என்றான்.
தன் மகனை ஒரு பார்வை பார்த்தார் நந்தினி. விமலன் ஏதோ கூறுவதற்கு முன்,
YOU ARE READING
உறவாய் வருவாய்...! (முடிந்தது)
Romanceஅவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்கள...