42 அதிரடியாட்டம்
அந்த முதல் முத்தத்திற்கு பிறகு, விக்ரமும் வைஷாலியும் ஒருவரை ஒருவர் பார்த்து, மீண்டும் மீண்டும் புன்னகைத்தபடியே இருந்தார்கள். ஆனால் விக்ரம் தனது அடுத்த அடியை எடுத்து வைக்க முயலவில்லை. ஏனென்றால் அவன் இந்த விஷயத்தில் அவசரப்பட நினைக்கவில்லை. அவனுக்கு என்ன வேறு சந்தர்ப்பம் கிடைக்காமலா போய்விடும்? தாங்கள் துவங்கிய நாடகத்தை மட்டும் அவன் தொடர்ந்து கொண்டிருந்தான். அவர்களுடைய மதிய உணவைக் கூட அவர்கள் அறைக்கே அனுப்பி விட்டார் சாவித்திரி.
மாலை
விக்ரமும், வைஷாலியும் ஆக்சிஜன் மருத்துவமனைக்கு செல்ல தயாரானார்கள்.
"மாம், நாங்க கிளம்பறோம்"
"பாத்து, பத்திரமா போயிட்டு வாங்க" என்றார் சாவித்திரி அக்கறையுடன்.
சரி என்று தலை அசைத்தான் விக்ரம். நந்தினியோ கள்ளப் புன்னகை பூத்தார்.
"வா வைஷு"
வைஷாலி அவனை பின் தொடர்ந்து சென்றாள். காரில் ஏறி அமர்ந்தவுடன், சுதாகருக்கு ஃபோன் செய்தான் விக்ரம்.
"சொல்லு விக்கி"
"நீ ரெடியா?"
"நான் ஆக்சிஜன் ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன்"
"நான் இன்னும் அரை மணி நேரத்தில் அங்க இருப்பேன்"
"சரி "
அழைப்பை துண்டித்து விட்டு வண்டியை கிளப்பினான் விக்ரம்.
இதற்கிடையில்,
நந்தினி, காமினியை கைப்பேசி மூலம் அழைத்தார்.
"அவங்க ரெண்டு பேரும் கிளம்பி அங்க தான் வந்துகிட்டு இருக்காங்க" என்றார் நந்தினி.
"நான் ரெடியா தான் இருக்கேன் "
"அந்தப் பொண்ணு வைஷாலி, இதுக்கப்புறம் சிரிக்கவே கூடாது" என்றார் நந்தினி.
"நான் பாத்துக்குறேன்... அவளாவே பொன்னகரத்தை விட்டு ஓட போற பாரு..."
அவர் பேச்சை வெட்டிய நந்தினி,
"விக்ரம் வாழ்க்கையை விட்டும் ஓடணும்" என்றார்.
ČTEŠ
உறவாய் வருவாய்...! (முடிந்தது)
Romanceஅவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்கள...