7 வினோத தீர்வு
எதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொண்டு நிற்கிறார் நந்தினி. அவருடைய திட்டமே வேறு. அவர் அதை செயல்படுத்தும் முன், தன்னுடைய முடிவில் விக்ரம் எவ்வளவு திடமாய் நிற்கிறான் என்பதை தெரிந்து கொண்டார் நந்தினி.
"நீ அவளை அமெரிக்காவுக்கு கூட்டிக்கிட்டு போக முடியாது" என்றார் நந்தினி.
"ஏன் கூட்டிக்கிட்டு போக முடியாது?" என்றான் தன் விழிகளை சுருக்கி.
"நீ பத்து வருஷமா அமெரிக்காவில் இருந்தவன். அந்த பழக்க வழக்கங்களை பார்த்து வளர்ந்தவன். அதனால உன்னால அதை ஏத்துக்க முடியுது. ஆனா, பொம்மியோட குடும்பம் அப்படி கிடையாது. அவங்க நம்ம கலாச்சாரத்தோட ஒட்டி வாழுறவங்க. அவங்கள பொறுத்த வரைக்கும் கல்யாணம் என்கிறது வெறும் சடங்கு இல்ல... வாழ்க்கை" என்று யாரும் மறுக்க முடியாத தன் எண்ணத்தை முன்வைத்தார் நந்தினி.
கைகளைக் கட்டிக் கொண்டு அவரை உறுதியாய் பார்த்தான் விக்ரம்.
"நீங்க என்ன சொல்ல வரீங்க? நான் என்ன செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்க?"
ஜோசியரை பார்த்து நந்தினி கூறுங்கள் என்பது போல் சைகை செய்தார். நந்தினி ஏற்கனவே தன்னிடம் ஒப்பித்து வைத்திருந்தவற்றை கூற தயாரானார் ஜோசியர்.
"இந்தப் பிரச்சனைக்கு என்னால ஒரு தீர்வை கொடுக்க முடியும்" என்றார் ஜோசியர். அனைவரது கவனமும் அவர் மீது சென்றது.
"என்ன சொல்யூஷன் கொடுப்பீங்க?" என்றான் விக்ரம்.
"ஒரு பொண்ணோட மரணத்துக்கு நீங்க காரணமாக இருக்க வேண்டாம்னு நினைக்கிறீங்க. அதனால தான் கல்யாணம் பண்ணிக்காமலேயே அந்த பொண்ணோட வாழலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க, இல்லையா?"
ஆமாம் என்று தலையசைத்தான் விக்ரம்.
"இந்த விஷயத்துக்கு எந்த பரிகாரமும் இல்லை என்கிறதை நான் ஒத்துக்கறேன். ஆனா, சில சமயம் விதியை மதியால் வெல்ல முடியும்" என்றார் ஆர்வமாக.
ESTÁS LEYENDO
உறவாய் வருவாய்...! (முடிந்தது)
Romanceஅவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்கள...