44 இல்லறம்
"என் கையில இருந்து நீ வெளியில வரவும் முடியாது. என்கிட்ட இருந்து ஓடவும் முடியாது" அவளது காது மடல்களை உரசியவாறு ரகசியம் உறைத்தான் விக்ரம்.
அவனது தோள்களை இறுக்கமாய் பற்றினாள் வைஷாலி. உணர்ச்சிப் பெருக்குடன் அவளை அணைத்துக் கொண்டான் விக்ரம். வைஷாலியின் கரங்களும் அனிச்சையாய் அவன் கழுத்தை சுற்றி வளைத்தன. அவ்வளவு தான், தன்னை மொத்தமாய் இழந்தான் விக்ரம். வைஷாலி தன்னை தடுத்து நிறுத்தவில்லை என்பது அவனுக்கு ஆச்சரியம் அளித்தது. இதற்கு முன் எப்போதும் காணாத ஒரு முக பாவத்தை அவன் வைஷாலியிடம் கண்டான். ஒரு ஆணின் முதல் ஸ்பரிசத்தால் ஏற்பட்ட, எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும் என்பது போல் இருந்த அவளது உடல் ஏற்படுத்திய முகமாற்றம் அது. அவள் தன்னை தடுக்கப் போவதில்லை என்று தெரிந்த பின், துவங்கியதை நிறுத்தி விட விக்ரம் என்ன பைத்தியமா? துவங்கிய கதை, தொடர்கதையானது. அவர்களது வியர்வை துளிகள் ஒன்று கலந்தன. *தேவை* என்னும் உணர்வில் மிதந்து கொண்டிருந்த அவர்களது தாகம் தீர்த்துக் கொள்ளப்பட்டது. அவர்களது இல்லற வாழ்வும் அர்த்தம் பெற்றது.
அவளது கழுத்தின் இடுக்கில் அழுத்தமாய் இதழ் பதித்தான் விக்ரம். அது அவளை சிலிர்க்கச் செய்தது.
"ஏய் பொம்மி..."
"ம்ம்ம்?"
"தேங்க்ஸ்"
"எதுக்கு?"
"என்னை தடுக்காம இருந்ததுக்கு"
"நான் தடுப்பேன்னு நினைச்சீங்களா?"
"படுக்கையை ஒரு போர்க்களமாவே மாத்திடுவேன்னு நினைச்சேன்"
கலகலவென சிரித்தாள் வைஷாலி.
"நான் இன்னைக்கு ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டேன்"
"என்னது?"
"நீயும் என்னை ரொம்ப காதலிக்கிற"
"நமக்கு கல்யாணம் ஆன நாளிலிருந்து..."
"நெஜமாவா? ஆனா ரொம்ப விரைப்பா இருந்தியே...!"
YOU ARE READING
உறவாய் வருவாய்...! (முடிந்தது)
Romanceஅவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்கள...