34 வசீகரிக்கும் விக்ரம்
என்ன செய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்தபடி அமர்ந்திருந்தார் நந்தினி. அவர் காமினிக்கு பத்திரிக்கை கூட அளிக்கவில்லை. என்ன தான் காமினிக்கு திருமணத்தில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாவிட்டாலும், அவரை அழைக்காமல் விடுவது மரியாதையாக இருக்காது. நாளை திருமணம். காமினியிடம் பத்திரிக்கை இல்லாவிட்டால் அவரை உள்ளே விட மாட்டார்கள். அப்படி நடந்தால் காமினி முகத்தில் விழிக்க முடியாது.
எல்லாவற்றிற்கும் மேலாக, வைசாலியை கொல்ல அவர் வகுத்து வைத்திருந்த திட்டத்தை, இப்போது அவரால் செயல்படுத்த முடியாது. பொன்னகரம் முழுதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. திருமணம் முடியும் வரை யாரும் உள்ளே நுழைய முடியாது. அவருடைய ஆட்கள் உள்ளே நுழைய முடியவில்லை என்றால், அவரது திட்டத்தை அவர் எப்படி செயல்படுத்த முடியும்? தலையை பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார் நந்தினி. பொன்னகரத்தின் தற்போதைய நிலைமையை, காமினியிடமிருந்து மறைக்க அவர் விரும்பவில்லை. காமினிக்கு போன் செய்து, அதைப் பற்றி அவரிடம் கூறிய போது, காமினி எரிச்சல் அடைந்தார்.
"இன்னிக்கி ராத்திரி, வைசாலி செத்துடுவான்னு சொன்னியே... அது நடக்காதா?"
"உனக்கே தெரியும், நான் எல்லாத்தையும் எவ்வளவு பக்காவா திட்டம் போட்டு வெச்சிருந்தேன்னு. என்னோட பாதுகாப்புக்காக, விக்ரம் போலீசை கூட்டிக்கிட்டு வந்து நிறுத்துவான்னு நான் எதிர்பார்க்கல. என் மேல அவன் அக்கறை காட்டும் போது நான் என்ன தான் செய்ய முடியும்?" என்றார் கவலையுடன்.
"உன்னை போய் நான் நம்பினேன் பாரு... அவளை தீர்த்துக்கட்ற பொறுப்பை என் கையில நான் எடுத்திருந்தா, எப்பவோ முடிச்சிருப்பேன்"
"எனக்கு கடைசியா ஒரு சந்தர்ப்பம் கொடு. இந்த கல்யாணத்தை நான் நிறுத்தி காட்றேன்"
"எப்படி நிறுத்துவ? இதுக்கு பிறகும் உன்னை நம்ப நான் தயாரா இல்ல"
YOU ARE READING
உறவாய் வருவாய்...! (முடிந்தது)
Romanceஅவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்கள...