53 விமலாதித்தனின் கோபம்

1.5K 82 10
                                    

53 விமலாதித்தனின் கோபம்

தூக்கத்தில் இருந்து கண் விழித்த வைஷாலி, படுக்கையை விட்டு இறங்க முற்பட்டபோது, அவளை தடுத்தான் விக்ரம்.

"எங்க போற?"

"கீழ போறேன்"

"வேண்டாம் போகாதே" என்றான்.

ஏனென்றால் தங்கள் மீது விமலாதித்தனுக்கு எந்த சந்தேகமும் வந்து விடக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான்.

"ஏன்?"

"அப்பாவை பொறுத்தவரை நீ வீக்கான பொண்ணு. நீ கீழ இருக்கிறத பாத்தா, அப்பா அம்மாவை தான் திட்டுவாரு" என்று கூறி அவளை தன்னுடன் இருத்திக் கொண்டான்.

தன்னால் சாவித்திரி திட்டு வாங்குவதை அவள் பொறுக்க மாட்டாள் என்று அவனுக்கு தெரியும். அவன் பக்கமாக திரும்பிப் படுத்து, அவனை அணைத்துக் கொண்டாள் வைஷாலி. அது விக்ரமின் முகத்தில் புன்னகையை வர வைத்தது.

"விக்ரம்..."

"ம்ம்ம்?"

"அம்மா என்ன செய்வாங்க?"

"அது தான் எனக்கும் தெரியல. ஆனா,
நிச்சயம் நம்மளை டிசப்பாய்ண்ட் பண்ண மாட்டாங்க"

"எது எப்படியோ, அவங்க ரிலாக்ஸ் ஆயிட்டாங்க. அது போதும்"

"அவங்க, லைஃப்ல ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க வைஷு. என்னை பாக்க வரும் போதெல்லாம் அழுவாங்க... என்னை விட்டு பிரியும் போதும் அழுவாங்க..."

"நீங்க? நீங்க அவங்கள மாதிரி கஷ்டப்படலையா?" என்றாள் தன் தலையை தூக்கி அவனைப் பார்த்தவாறு.

"அவங்களை விட அதிகமா நான் கஷ்டப்பட்டேன். என்னை அவங்க அமெரிக்காவுக்கு அனுப்பி வச்ச போது, எனக்கு வெறும் பதினாலு வயசு தான்"

"இதெல்லாம் என்னால தானே?" என்றாள் சோகமாய்.

"இல்ல... இதெல்லாம் பாட்டியால... அவங்க கொஞ்சம் கூட கருணையே இல்லாத பொம்பளை. உன்கிட்ட இருந்து என்னை பிரிச்சு வைக்கணும் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக, என்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வச்சாங்க"

உறவாய் வருவாய்...! (முடிந்தது)Donde viven las historias. Descúbrelo ahora