51 நந்தினியின் நம்பிக்கை

1.4K 91 12
                                    

51 நந்தினியின் நம்பிக்கை

வைஷாலி மருத்துவமனையில் இருந்து விடு திரும்பினாள். விக்ரம் அவளை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். விமலாதித்தனும் சாவித்திரியும் ஏற்கனவே வீடு திரும்பி விட்டிருந்தார்கள். வைஷாலிக்கு கொடுக்க சத்தான உணவை சமைத்துக் கொண்டிருந்தார் சாவித்திரி.

தன் அம்மாவின் மீது கடும் கோபத்தில் இருந்தார் விமலாதித்தன். சாவித்திரிக்கு தெரியாமல், அவரிடம் ஒரு விஷயத்தை தனிமையில் கூறியிருந்தார் காமினி. அதை கேட்டதிலிருந்து அவர் இடிந்து போய் காணப்பட்டார்.

*நான் சாவித்திரிக்கு முன்னால சொன்னது பொய். அவளால உண்மைய தாங்க முடியாதுன்னு தான் பொய் சொன்னேன். மறுபடி கர்ப்பம் ஆகறதுல வைஷாலிக்கு பிரச்சனை இருக்கு. அவளுடைய கருப்பை ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டு இருக்கு. அவளுக்கு நிச்சயம் மெடிக்கல் சப்போர்ட் தேவை. சீக்கிரமே நல்லது நடக்கும்னு நம்புவோம்* என்றார் காமினி.

கார் ஹாரன் சத்தம் கேட்டு தன் முகத்தை துடைத்துக் கொண்டார் விமலாதித்தன். விக்ரமும், வைசாலியும் உள்ளே நுழைந்தார்கள். சோர்ந்து போயிருந்த வைஷாலியின் முகத்தை பார்த்த போது, விமலாதித்தனுக்கு குற்ற உணர்ச்சி மேலோங்கியது. தன் குடும்ப வாரிசை கூட காப்பாற்ற முடியாத கோழை என்று தன்னை அவர் எண்ணினார்.

வைஷாலியை தங்கள் அறைக்கு அழைத்து வந்து, கதவை சாத்தி தாளிட்டுக் கொண்டான் விக்ரம். அக்கடா என்று கட்டிலில் சாய்ந்தான். அவன் அருகில் வைஷாலியும் படுத்துக்கொண்டாள். 

"பாட்டி ஏதாவது சாப்பிட்டாங்களா?" என்றாள்

"சாப்பிட்டிருக்க மாட்டாங்க. நம்மளை தவிர, அவங்களுக்கு சாப்பாடு போட  யாரும் இல்ல"

"நான் போய் சாப்பாடு கொடுத்துட்டு வரேன்" என்றாள் வைஷாலி.

"இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு கொடு"

சரி என்று கேட்டுக்கொண்டாள் வைஷாலி.

அப்போது அவர்கள் அறையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க, கட்டிலை விட்டு எழுந்தான் விக்ரம். ஒழுங்காய் படுத்துக்கொண்டாள் வைஷாலி. விக்ரம் கதவை திறக்க, அங்கு சூப் கிண்ணத்துடன் நின்றிருந்தார் சாவித்திரி. விக்ரமைப் பார்த்து முறைத்தார் அவர்.

உறவாய் வருவாய்...! (முடிந்தது)Donde viven las historias. Descúbrelo ahora