40 குருஜியின் வருகை

1.4K 79 14
                                    

40 குருஜியின் வருகை

இரவு உணவை முடித்துக் கொண்டு, தங்கள் அறைக்குத் திரும்பினார்கள் விக்ரமும் வைஷாலியும். வைஷாலியை பார்த்தபடி அமர்ந்தான் விக்ரம். அவன் முகத்தில் கவலை தெரிந்தது. என்ன? என்பது போல் அவனை பார்த்தாள் வைஷாலி.

"பாட்டி, உன்னை எமோஷனலா உடைக்க ட்ரை பண்றாங்கன்னு நினைக்கிறேன்" என்றான்.

"சந்தேகமே இல்ல. அதே தான்" என்றாள் வைஷாலி.

"குருஜி, உனக்கு சாபமே கொடுத்தா கூட அதைப்பத்தி எல்லாம் நீ கவலை படாத"

"அவர் ஏன் என்னை சபிக்க போறார்?"

"பாட்டி நாளைக்கு என்னமோ செய்யப் போறாங்க. ஆனா என்னனு தான் எனக்கு புரியல"

"தேவையில்லாம கவலைப்படுறதை விட்டுட்டு, தூங்குங்க. அவங்களை நான் பார்த்துக்கிறேன்."

"அவங்களை அண்டர் எஸ்டிமேட் பண்ணாத"

"என்னை விட அவங்களைப் பத்தி வேற யாருக்கு நல்லா தெரிஞ்சிட போகுது?"

"அப்படி இருக்கும் போது, நீ எப்படி இவ்வளவு கூலா இருக்க?"

"பதட்டப்பட்டு ஒன்னும் நடக்க போறது இல்ல. ரெண்டுல ஒன்னு பாத்துட வேண்டியது தான்"

தன்னை போர்வையால் போர்த்திக் கொண்டு படுத்துக்கொண்டாள் வைஷாலி. தன் உதடுகளை ஒன்றாய் அழுத்தி பெருமூச்சுவிட்டான் விக்ரம். நாளை வைஷாலி என்ன செய்யப் போகிறாளோ தெரியவில்லை. அதைப்பற்றி யோசித்தவாறே அவனும் படுத்துக்கொண்டான்.

மறுநாள் காலை

விக்ரம் தூக்கத்திலிருந்து கண் விழித்த போது, வைஷாலி அந்த அறையில் இல்லை. குளியலறையிலும் காணப்படவில்லை. குளியலறைக்கு விரைந்து சென்று, குளித்து முடித்து வைஷாலியை தேடிக்கொண்டு தரைதளம் வந்தான். அப்போது நந்தினியும் அங்கு வந்தார். சோபாவில் அமர்ந்திருந்த சாவித்திரி,  அவரை பார்த்து எழுந்து நின்றார்.

"வைஷாலியை கூப்பிட்டு இப்பவே  சமையலை ஆரம்பிக்க சொல்லு. அப்ப தான், குருஜி வர்றதுக்கு முன்னாடி சமைச்சு முடிக்க முடியும்"

உறவாய் வருவாய்...! (முடிந்தது)Donde viven las historias. Descúbrelo ahora