17 அப்பாவி பெண்ணா?

1.7K 83 11
                                    

17 அப்பாவிப் பெண்ணா?

வைஷாலி செல்வதையே பார்த்துக்கொண்டு நின்றான் விக்ரம்.

"நீ சந்தேகப்பட்ட மாதிரியே, உன்னோட ஜாதகமும் கூட உன் பாட்டி ஏற்பாடு செஞ்ச நாடகம் தான் இல்லையா?" என்றான் சுதாகர்.

ஆமாம் என்று தலை அசைத்தான் விக்ரம்.

"இப்படிப்பட்ட ஒரு பொம்பளையை நான் பார்த்ததே இல்ல. டிவி சீரியலில் வர்ற வில்லி மாதிரி நடந்துக்கிறாங்க" என்றான் சுதாகர் வெறுப்புடன்.

"அவங்களை திட்டாத சுதா. அவங்க இதையெல்லாம் செஞ்சது எந்த எண்ணத்தில் வேணா இருக்கலாம். ஆனா, நிச்சயமா அவங்க எனக்கு சாதகமா தான் நடந்திருக்காங்க. எனக்கு அதிக சிரமம் வைக்காம, வைஷாலியை அவங்களே என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து காட்டிட்டாங்க இல்லையா?" என்றான் நமுட்டு சிரிப்புடன்.

"ஆனா அவங்களுடைய எல்லா நடவடிக்கையும் உனக்கு சாதகமா இருக்காது."என்றான் எச்சரிக்கும் தொனியில்.

"நிச்சயமா இருக்கப் போறது இல்ல. எனக்கு தான் அவங்களுடைய நிஜமுகம் தெரிஞ்சு போச்சே... என்னை ஏமாத்துறதா நினைச்சுக்கிட்டு, அவங்க முகமூடியை மாட்டிகிட்டு அலையட்டும். அவங்களைப் பத்தி யாரு கவலை பட போறது?"

"நீ என்ன செய்யப் போற?"

"வைஷாலியை என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போகப் போறேன்... நிரந்தரமா... என்னுடைய மனைவியா"

"உன் பாட்டியோட தந்திரத்துக்கு முன்னாடி, வைஷாலியால நிக்க முடியும்னு நீ நினைக்கிறாயா? அவங்க ஒரு அப்பாவிப் பொண்ணு... நீ அவங்களை நெருப்பு மெல்ல நிறுத்தப் போறியா?" என்றான் பயத்துடன்.

"நீ என்னை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க? என்னோட பாட்டி செய்யறதை எல்லாம் கையை கட்டிகிட்டு நான் வேடிக்கை பார்த்துக் கிட்டிருப்பேன்னு நினைக்கிறியா? என் பொண்டாட்டியை நான் பாதுகாக்க மாட்டேனா?" என்றான் சற்று கோபமாக.

"எல்லா நேரமும் உன்னால வைஷாலி கூட இருக்க முடியுமா?" என்ற தரமான கேள்வியை முன் வைத்தான் சுதாகர்.

உறவாய் வருவாய்...! (முடிந்தது)حيث تعيش القصص. اكتشف الآن