32 பார்ட்டி

1.4K 84 8
                                    

32 பார்ட்டி

பார்ட்டிக்கு தேவையான ஏற்பாட்டை கவனித்துக் கொண்டிருந்தார் சாவித்திரி. அவருக்கு உதவி கொண்டிருந்தார் கோப்பெருந்தேவி. உயர்தட்டு பெண்களும் ஆண்களும் விழாவை சிறப்பிக்க தயாராக இருந்தார்கள். ஆட்டமும் பாட்டமுமாய் விழா களை கட்ட தயாரானது.

இந்த முறை நந்தினியே காமினியை வரவழைத்திருந்தார். தன்னை தொல்லை செய்து கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு இந்த முறை எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் வழங்க அவர் தயாராக இல்லை. ஆனால், நந்தினி தன்னை அழைத்தது காமினிக்கு சிறிதும் பிடிக்கவில்லை. 

"எனக்கு விருப்பமில்லாத இந்த பங்ஷனுக்கு வர சொல்லி எதுக்காக என்னை தொல்லைப்படுத்தின?"

"நான் ஏன் உன்னை வர சொன்னேன்னா, அப்போ தான் என் மேல யாருக்கும் சந்தேகம் வராது. நான் இந்த கல்யாணத்தை முழு மனசோட நடத்த விடுறதா எல்லாரும் நினைப்பாங்க. இங்க வர உனக்கு விருப்பம் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் எனக்கு வேற வழி இல்ல.  தயவுசெய்து புரிஞ்சுக்கோ"

அரை மனதுடன் தலையாட்டினார் காமினி.

"வா, வந்து ஏதாவது சாப்பிடு. நீ சாதாரணமா இருக்கிற மாதிரி காட்டிக்கோ"

சரி என்று தலையசைத்தார் காமினி.

முழுதாய் தயாரான நிலையில் தரைதளம் வந்த விக்ரம், இங்கும் அங்கும் வைஷாலியை தேடினான். அவள் இன்னும் தயாராகவில்லை போலிருக்கிறது. பெண்கள் தயாராக சற்று அதிக நேரம் எடுக்க தானே செய்யும்?  இது அவளது திருமணத்திற்கான விழாவாயிற்றே...!

*இன்னும் அவ வர எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியல* என்று முணுமுணுத்தான் விக்ரம்.

வந்திருந்த விருந்தினர் அனைவருக்கும் பழச்சாறு வழங்கிக் கொண்டிருந்தார் ஜெயம்மா. அவரிடமிருந்து ஒரு தம்ளரை எடுத்துக் கொண்டான் விக்ரம். மாடிப்படியை பார்த்தபடி அதை பருகினான். தம்ளரை வாயில் வைத்த அவன், பருகுவதை நிறுத்தினான், வைஷாலி மாடியிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்து. சிறிது நேரம் அவன் மூச்சு விடவும் மறந்தான். *ப்ரீத் டேக்கிங்* என்றால் இது தானோ? சில நொடிகளுக்கு, அவனை  மூச்சு விடவும் மறக்கச் செய்ய ஒரு பெண்ணால் முடியும் என்று அவன் இதுவரை நினைத்ததில்லை. பழச்சாறு தம்ளரை ஓரமாய் வைத்து விட்டு அவளை நோக்கி வந்தான்.

உறவாய் வருவாய்...! (முடிந்தது)Donde viven las historias. Descúbrelo ahora