அத்தியாயம் 28

1.4K 68 2
                                    

"யாழு" என்று ஆனந்த் யாழ்மொழிக்கு போன் செய்து பெயரை மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த 

"பயமா இருக்கு." என்றாள் அவள்.

"அதே பயத்துடன் அப்படியே இரு.  நான் அவனை அங்கே இருந்து கிளப்பிடுறேன்." என்று ஆனந்த் போனை வைக்க போக 

"இல்ல வேண்டாம். இன்னும் ஒரு நாள் டைம் தாங்க." என்று இவள் வைத்துவிட்டாள்.  

அன்று இரவு அவன் சாப்பிட்டுவிட்டு எழ 

"மிகா இதை குடிச்சிட்டு போ." என்று பாலை நீட்டினாள் அவள். 

"எதுக்கு இப்பவே! படுக்கும் போது குடிச்சிக்கிறேன்." என்று அவன் கூற 

"அப்போ ஒருதடவை உன்னை தேடி வர முடியாது.   இப்பவே குடிச்சிட்டு போ.  கொஞ்சம் முன்னே பின்னே ஆனா ஒன்னும் குறைஞ்சிடாது." என்று இவள் கூற அவன் நேற்று நடந்ததை நினைத்துவிட்டு அதன் மாதிரி ஒரு சூழ்நிலையை தடுக்க நினைக்கிறாள் என்று நினைத்து அவள் நீட்டிய பாலை வாங்கி  குடித்துவிட்டு மேலே தன் அறைக்கு சென்றுவிட்டான்.  

ஒரு அரை மணி நேரம் கழித்து அவன் அறைக்கு இவள் சென்றாள்.  அவன் மயக்கமும் இல்லாமல், தெளிவும் இல்லாத ஒரு நிலையில் இருந்தான்.  

"சாரி மிகா.." என்று கூறும் போது அவள் கண்ணில் கண்ணீர் சாடியது.  பெட்டில் படுத்திருந்தவனின் அருகில் இவள் போகவும் அவனே இவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டான்.  

மறுநாள் அவன் கிளம்பும் முன் ஆனந்த் வந்துவிட்டான்.  

"இந்த பொம்மையை எங்கே? சொல்லாமல் போனாலும் ஒரே பிரச்சனையாக இருக்கும், சொல்லிட்டு போகலாமுன்னு பார்த்தா காலையில் இருந்து ஆளே காணல.  எனக்கு வேற கொஞ்சம் தலைபாரமா இருக்கு.!" என்று கூறிக்கொண்டே அயன்மிகன் அவளை தேடி போனான்.  ஆனந்த் கலக்கத்துடன் நின்றான்.

"பொம்ம!" என்று சத்தம் கொடுத்துக்கொண்டே அவன் உள்ளே செல்ல அவள் கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள் சுவற்றை பார்த்து.  

"பொம்ம!" என்றவன் அவள் படுத்திருந்த நிலையை பார்த்து அவள் அருகில் சென்று அவள் நெற்றியை தொட்டுப்பார்க்க அது தீயாக கொத்தித்தது.  

ஜீவன் உருகி நின்றேன் Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ