'இருள் வந்து சூழும் போது, தினம் நினைக்கிறோம் நாளை விடிந்துவிடும் என்று.
நாளை விடியும் என்று நான் துயில் கொள்ள, விடிவது ஆகாயத்துக்கு மட்டுமே! என் வாழ்க்கைக்கு இல்லை.
கடவுளிடம் கேட்கிறேன்! இறைவா உனக்கு எதுக்கு இந்த ஓரவஞ்சனை!
இயற்கை மட்டுமல்ல, நானும் உன் சிருஷ்டிதானே என்று!
என் கேள்விக்கு பதில் தெரியாமல் இறைவனும் மொழியறியா ஊமையாகி போனானோ!'
"ஏய் சூப்பரா இருக்கு? இது யாரு எழுதிய கவிதையடி?" என்று கல்பனா கைகளை தட்டிக்கொண்டு யாழ்மொழியிடம் கேட்க
"இதுக்கு என்ன கவிஞர் வைரமுத்தா வர முடியும்? நான்தான் நேரம் போகாமல் கிறுக்கிட்டு இருந்தேன். ஏய் கல்பனா உண்மையை சொல்லு, உனக்கு கிட்னி வாங்கும் யாரையுமே தெரியாதா?" என்று நூறாவது முறையாக யாழ்மொழி கேட்க கல்பனா டென்ஷன் ஆகி போனாள்.
"போடி இவள! உறுப்பு திருட்டு இப்போ எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா?" என்று கல்பனா கூற
"நான்தானே விருப்பி கொடுக்க போறேன். அப்புறம் எப்படி இது திருட்டாகும்?" என்றாள் யாழ்மொழி.
"ஒரு இருபத்தொரு வயசு பொண்ணு விரும்பி தன் உறுப்பை தானம் செய்யுதுன்னு சொன்னா யார் நம்புவாங்க. கேடிப்பயலுக இருக்கிற உலகம். நோயையும் கண்டுபிடிச்சு, அதுக்கு வைத்தியமும் கண்டுபிடிச்சு அதுக்காக அவார்டை வேற வாங்கிக்கிற கேப்மாரி, மொள்ளமாரி, கசமாலம், பொறம்போக்கு எல்லாம் வாழுற உலகம் இது. நீ முதலில் இந்த கிட்னி பேச்சை விட்டுட்டு இந்த சட்டினியில் வடையை தொட்டு சாப்பிடு. கிடைக்கிற பத்து நிமிஷ ப்ரேக்கிலும் உன் புலப்பம் பெரிய புலப்பமா இருக்கே!" என்று கல்பனா சலித்துக்கொள்ள யாழ்மொழி கையில் இருந்த டீயை குடிக்க மனமில்லாமல் வைத்துக்கொண்டே நின்றாள்.
"ஹே பியுட்டி! கேன் ஐ" என்று அவர்கள் இருவரும் இருந்த மேஜையில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர பர்மிஷன் கேட்டு நின்றான் கிஷோர்குமார். அவனை இதுவரை நேரில் பார்த்திராதவர்கள் "எவன் இவன்?" என்று முக சுழிப்புடன் பார்க்க
BINABASA MO ANG
ஜீவன் உருகி நின்றேன்
Romanceகாதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்னில் நீ.