அத்தியாயம் 14

1.4K 67 4
                                    

"டாக்டர் இது ஏதோ விட்டமின் குறையால வந்த அலர்ஜின்னு சொல்றாரு." என்று ஆபிஸில் இருந்து திரும்பி வந்த ஆனந்த் சொல்ல 

"ம்" என்றாள் யாழ்மொழி கன்னத்தில் டீவி ரிமொர்ட்டை வைத்து தாங்கிக்கொண்டு.  

"என்ன ம்? ஒழுங்கா சாப்பிட்டு இருந்தா இதெல்லாம் வருமா?" என்று ஆனந்த் கேட்க 

"சாப்பாடு யாரு தந்தா நான் சாப்பிட? நானும் பாடத்தில் படிச்சிருக்கேன். விட்டமின் பி குறைப்பாடு இருந்தா சில நோய்கள் வரலாமுன்னு.  அதுவா கூட இது இருக்கலாம்." என்று அவள் கூற அவளின் கல்வி அறிவை அவள் சரியாக பயன்படுத்துவதாகவே நினைத்தான்.  சாப்பாட்டை பற்றி அவள் சொன்னதுக்கு   கேள்வி கேட்டால் பதிலாக வேறு எதாவது சொல்லி மழுப்புவாள் என்று 

"நீ என்ன படிச்சிருக்க?" என்று கேட்டான் அவன்.

"ப்ளஸ் டூ" என்றாள் அவள்.

"அப்புறம் ஏன் படிக்கல?" என்று அவன் கேட்க சோர்ந்து இருந்த அவளின் விழியால் அவனை பார்த்தவள் 

"படிக்கல" என்றாள் விட்டேரியாக.

"அதான் ஏன் படிக்கல" என்று இவன் கேட்க 

"அப்பாவுக்கு மேலுக்கு முடியாம போயிட்டு." என்றாள் இவள்.

"படிக்க போறது நீயா இல்ல உன் அப்பாவா? அவருக்கு மேலுக்கு முடியாட்டி என்ன?" என்று இவன் கேட்க 

"பணம்" என்றாள் அவள்.

"ஒழுங்காதான் பதில் சொல்லி தொலையேன் அறிவு கொழுந்தே!" என்றான் அவன்.

"நீங்கதான் அறிவு கொழுந்து.  உங்களுக்கு நான் சொல்றது புரியல.  அதுக்காக என்னை குறை சொல்லுவிங்களா? பணம்ன்னா அதுக்கு அர்த்தம், படிக்க பணத்தை எங்க அப்பாதானே கட்டனும்.  ப்ளஸ் டூ வரைதானே இலவசமா படிப்பை தராங்க.  அதை வச்சு எந்த வேலைக்கு போக முடியுது.  கடைசியில் எனக்கு படிப்பை முடிச்ச உடன் கிடைச்சது மில்லு வேலைதான்.  நாலு வருஷம் கான்ட்ரக்ட்.  மூணு வருஷம் முடிஞ்சிருந்தது.  அங்கே என்ன எனக்கு பாதமும், பிஸ்தாவுமா தராங்க.  ஏதோ வெந்ததும் வேகாததுமா கிடைக்கும்.  வெளியே அதிகமா போக முடியாது.  மில்லுகுள்ளே அடைபட்டு இருந்து வெளி உலகத்தை பார்ப்பதே அதிசயமாயிட்டு.  நின்னுட்டே இருக்கணும். காலு எலும்பு இருக்கா இல்லையான்னு இனிதான் ஸ்கேன் எடுத்து பார்க்கணும். அப்புறம்...." என்று சொல்லிக்கொண்டே வந்தவள் இடையில் நிறுத்திவிட்டு 

ஜீவன் உருகி நின்றேன் Donde viven las historias. Descúbrelo ahora