"ஆஆஆஆஆஆ" என்ற அலறல் சத்தம் கேட்கவும் ஆனந்த் என்னவோ, ஏதோன்னு அடித்து பிடித்து ஓடிவந்தான்.
"என்னாச்சு?" என்று அவன் கேட்க
"இவருதான் டெய்லரா?" என்று கேட்டாள் யாழ்மொழி.
"ஆமாம். ஏன் இவருக்கு என்ன?" என்று ஆனந்த் கேட்க
"உடம்புதான் காண்டாமிருகம் மாதிரி வளர்ந்திருக்கு உங்களுக்கு, அறிவு குருவிக்கு இருக்கும் அளவு கூட இல்ல." என்று அவள் கூற
"ஏய் வாயை உடைச்சிடுவேன்!" என்றான் இவன்.
"எங்கே உடைச்சு காட்டுங்க பார்ப்போம். செய்தது எல்லாம் மூளையில்லாத வேலை. கேட்டா அடிப்பாராமே! எங்களை பார்த்தால் உங்களுக்கு எல்லாம் என்ன மாதிரி இருக்கு. நீங்க கடத்திட்டு வந்து வச்சிருக்கதால வேற மாதிரி நினைச்சிட்டிங்களா?" என்று அவள் எகிற
"அம்மா தாயே! தேவதை இப்போ உன் பிரச்சனை என்ன? அதை மட்டும் சொல்லு. எனக்கு ஏகப்பட்ட வேலையிருக்கு. இப்போதான் உன் வருங்கால கணவன் டீவில பேட்டிக்கொடுக்க ஆரம்பிச்சிருக்கான். இன்னும் இருபத்திநாலு மணிக்குள்ள உன்னை ஒப்படைக்கலன்னா அவன் விஸ்வரூபம் எடுப்பானாம். இவ்வளவு பேசுரவன் கல்யாணம் பண்ணிக்க போற பெண்ணை எதுக்காக அந்த ஆளு நடமாட்டம் இல்லாத ஹைவேல தனியா விட்டுட்டு போனானோ தெரியல. ஆமாம், நீ அவனை விரும்பிதான் கட்டிக்க போறியா இல்ல இதுல வேற எதுவும் வில்லங்கம் இருக்கா?" என்று கேட்டான் ஆனந்த் எதார்த்தமாக பேசுவது போல அவளிடம் இருந்து ஏதாவது தகவல் கிடைக்குமா என்று நினைத்து.
"அதையெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது. எப்படியும் என்னைவிட வயசில் பெரியவங்களா இருப்பீங்கன்னுதான் வாங்க போங்கன்னு மரியாதை கொடுக்க முடிவு பண்ணிருக்கேன். வேண்டாத கேள்வியை கேட்டு அதை கெடுத்துக்காதிங்க." என்று அவள் கூற
"அயன் அப்பவே இந்தியா கிளம்பிட்டான்." என்றான் ஆனந்த் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு.
"என்ன?" என்று கேட்டவள் குரலில் இருநூறு சதவீதம் அதிர்ச்சி இருந்தது.
ESTÁS LEYENDO
ஜீவன் உருகி நின்றேன்
Romanceகாதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்னில் நீ.