அத்தியாயம் 3

1.6K 68 4
                                    

"ஏய் தெரியுமாப்பா! நம்ம யாழ்மொழிக்கும், கல்பனாவுக்கும் சென்னையில வேலை கிடைச்சிருக்காம். இப்போ நமக்கு வந்திருக்கிற புது ஓனர்தான் அங்கே அவங்களுக்கு வேலை போட்டு கொடுத்திருக்கிறாம்.  சம்பளம் அதிகமாம்.  அதனால ஒத்துகிட்டாங்க போல.  யாழ்மொழி வேற அவ அப்பா வைத்திய செலவுக்கு பணம் கேட்டுட்டு இருந்தா.!" என்று மில்லில் பேச்சு அடிப்பட கல்பனாவும், யாழ்மொழியும் சேர்ந்தே அங்கே இருந்து சென்னைக்கு போவதாக கிளம்பி சென்றார்கள்.  ஆனால் கல்பனா அவளது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டாள். கிஷோர் அதற்காக அவளுக்கு சிறிது பணத்தை கொடுக்க 

"தேவையில்லை" என்று கல்பனா கோபத்துடனே மறுத்துவிட்டாள்.  அவளுக்கு கோபம் கிஷோர் மேல் மட்டும் இல்லை.  எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேளாத யாழ்மொழி மேலும்தான்.  யாழ்மொழியின் இந்த முடிவால் பிற்காலத்தில் அவளுக்கு வர போகும் பிரச்சனைகளை எல்லாம் எடுத்து கூறி அவளை இந்த செயலை செய்யவிடாமல் செய்ய கல்பனா எடுத்த எல்லா முயற்சியும் விரயமானதுதான் மிச்சம்.  தகப்பனின் உயிருக்கு முன்னாள் யாழ்மொழிக்கு எதுவுமே முக்கியமாகப்படவில்லை.  கடைசியாக 'உன் அம்மாவிடம் சொல்லிவிடுவேன்' என்று கல்பனா கூற 'என் மேல் சத்தியம் கல்பனா, நீ எதையும் அம்மாவிடம் சொல்ல கூடாது. என் வீட்டின் நிலைமையை என்னைவிட யாரு அறிந்திருக்க முடியும் சொல்லு.  இதுவே ஒரு பையனா இருந்தா என் அப்பாவை இப்படியே விட்டிருப்பானா? நான் மகனுமாக இருந்து இதை முடிக்கணும்." என்று யாழ்மொழி இறுதியாகவும், உறுதியாகவும் கூறிவிட 

'விதி  யாரை விட்டது' என்று கல்பனா அமைதியாகிவிட்டாள்.  ஆனால் அவளுக்கு உள்ளூர இருந்த கோபம் அப்படியே இருக்க யாழ்மொழிக்கு துணையாக இருந்திருக்கவேண்டிய ஒரு வாய்ப்பையும் யோசிக்காமல் போய்விட்டாள்.  யாழ்மொழியுடன் இவள் போகவேண்டும் என்று ஒரு கன்டிஷனை போட்டிருந்தா கண்டிப்பா கிஷோர் ஏற்றிருப்பான் என்று நினைத்தாள் கல்பனா.  ஆனால் அப்படியில்லை என்று அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.  

ஜீவன் உருகி நின்றேன் Kde žijí příběhy. Začni objevovat