அத்தியாயம் 16

1.4K 71 4
                                    

"யாழு ஒழுங்கா நேரா நேரத்துக்கு சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு. உள்ளயே அடைஞ்சு கிடக்காம தோட்டத்துக்கு போ.  அநேகமா இன்னைக்கு அயன் வந்தாலும் வருவான்.  ஒரு பிஸினெஸ் டீலில் சைன் போடதுக்காக வரசொல்லியிருந்தேன்.  அதுக்குள்ள எனக்கு இங்கே ஒரு அர்ஜென்ட் மீட்டிங் போகவேண்டியதாயிடிச்சு.  நான் வர நைட் ஆயிடும். அவன் வந்தா அவனிடம் வாயை கொடுத்து ஏதாவது வம்பி இழுத்து வைக்காதே!" என்று கூறிவிட்டு கிளம்பிய ஆனந்த் வெளியே போயிட்டு திரும்பி வந்தான்.

"அப்புறம் இன்னொரு முறை அவனை கொலைக்காரன்னு சொல்லாதே! அவன் இதுவரைக்கும் கொலை பண்ணல, அப்புறம் முதல் கொலை நீயா இருந்துற போற. அவனுக்கு கோபம் ரொம்ப ஈஸியா வரும்.  அப்புறம் ஐய்யோ அம்மான்னு அழாதே!" என்று மீண்டும் எச்சரித்துவிட்டு ஆனந்த் சென்றுவிட்டான்.  

இவள் தோட்டத்தில் நின்றிருந்தாள். பெயர் தெரியாத மலர்களை பார்த்துக்கொண்டு அவற்றைப்பற்றி பேசிக்கொண்டு இருந்தாள் தோட்டத்தை பராமரிப்பவரிடம். பேசிக்கொண்டு என்றால் வாய்மொழியால் அல்ல, கை ஜாடையால்.  இவள் இப்படி ஊமை பாஷை பேசிக்கொண்டு இருக்க ஒரு கார் கேட்டை தாண்டி உள்ளே வந்தது.

"ஹும் மாப்பிளை வந்துட்டாரு போல.  காருல வந்தது போல இருக்கு? வழக்கமா சொந்தமாத்தானே பறந்து வருவாரு. ஒருவேளை யாரையாவது கடத்திட்டு வரும்போது  மட்டும்தான் அதை யூஸ் பண்ணுவாரோ!" என்று இவள் மைன்ட் வாய்ஸ்க்குள் போக அவன் காரில் இருந்து இறங்கி இவளை கடந்து வீட்டிற்குள் போயிட்டே இருந்தான்.  கண்ணில் அவன் போட்டிருந்த கூலர் அவன் எங்கே பார்க்கிறான் என்பதை மறைத்திருந்தது.  

அவன் அவளை கடந்து போன தோரணை இவளுக்கு எரிச்சலை மூட்டியது.  இவளை ஒரு மனுஷியாக கூட அவன் மதிக்கவில்லை என்பது போல இருந்தது அவனின் செய்கை.  

"என்ன திமிரு? எப்படி போறான்? எல்லாம் துட்டு செய்யுற வேலை.  நான் இங்கே தேவையில்லன்னா என்னை அனுப்பிட வேண்டியதுதானே! அதைவிட்டுட்டு ரொம்ப ஓவரா போறான்." என்று பேசிக்கொண்டே இவள் வீட்டிற்குள் சென்றாள்.  அவன் ஹாலில் இல்லை.  

ஜீவன் உருகி நின்றேன் Donde viven las historias. Descúbrelo ahora