அத்தியாயம் 20

2.3K 82 9
                                    

அயன்மிகன் போன் செய்து பேசிய அன்று இரவு யாழ்மொழி நன்றாக தூங்கி எழ மறுநாள் சற்று தெம்பாக காணப்பட்டாள்.  ஹாலில் வந்து அமர்ந்தாள்.  அவளின் எதிரே ஆனந்த் அமர்ந்திருந்தான் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு.  அவள் எதிரே அமர்ந்திருந்தவன் அவளையும், வாசலையும் மாறி மாறி பார்த்தான்.  இருவருமே ஒரே  வேலையை பார்க்கத்தான் ஹாலில் அமர்ந்திருந்தார்கள்.  இருவருக்குமே வேறு வேறு எதிர்பார்ப்பு அயன்மிகன் வருவானா? என்று.  வருவான் என்ற நம்பிக்கையில் யாழ்மொழி. அதற்கு வாய்ப்பே இல்லை என்ற உறுதியில் ஆனந்த்.  

ஆரம்பத்தில் நம்பிக்கையுடன் இருந்த யாழ்மொழிக்கு நேரம் செல்ல செல்ல முகம் இருள தொடங்கியது.  ஆனந்த்தின் முகம் பிரகாசமாக தொடங்கியது.  இறுதியில் வென்றது ஆனந்த்தான்.  காத்திருந்து ஏமாற்றத்துடன் யாழ்மொழி எழுந்து தன் அறைக்கு செல்ல முயல 

"என்ன பறக்கலையா?" என்று கேட்டான் ஆனந்த்.

"இல்ல, கழுகு சுத்திட்டே இருக்கு மேலே" என்று இவளும் அவனின் வார்த்தையிலேயே பதில் கொடுத்துவிட்டு சென்றுவிட, ஆனந்த் யோசனையில் ஆழ்ந்தான்.  

தன் அறைக்குள் சென்றவளுக்கு அழுகை எட்டிப்பார்க்க "எதுக்கெல்லாம் அழுவ?" என்று அவள் மனது கேட்டது.  அழுதால் எல்லாவற்றையும் சாதித்துவிடலாம், முடியாததை நடத்தி முடித்துவிடலாம்  என்ற நிலை இருந்தால் இந்த உலகத்தில்  இண்டு இடுக்கு, சந்து, பொந்து என்று ஒரு இடம் விடாமல் அழுகை சத்தம் மட்டும்தானே கேட்கும்.  எல்லோருக்கும் இன்பம் சைக்கிளில் வந்தால் துயரம் ராக்கெட்டில் அல்லவா வருகிறது.  பிரச்சனை, போராட்டம் இல்லாத மனிதன் யாரு இங்கே? எதற்காக அழ வேண்டும்? என்று அவளின் மனம் கேள்வி கேட்க அதன் பின் அவள் அழவில்லை. அவளுக்கு என்ன தேவை என்பதை அவள் அமைதியாக அமர்ந்து சிந்திக்க தொடங்கினாள்.  

இவளே எதிர்பாராமல் அவள் வாழ்க்கையில் என்ன என்ன துன்பமோ வந்துவிட்டது.  செத்து பிழைத்தது போல பிழைத்திருக்கிறாள்.  இதெல்லாம் ஏன் நடந்தது? எதில் இருந்து வெளி வர என்ன செய்வது? என்று இவள் சிந்தித்துக்கொண்டே இருந்தாள்.  இவளின் சிந்திப்பில் இவளுக்கான பதில் இவளுக்கு கிடைத்தது.  ஆனால் அதை அவளே ஒத்துக்கொள்ளவில்லை.  வெறும் வயதின் கிளர்ச்சி என்றே அதை நினைத்தாள் அவள்.  அதன் பின் அவள் தொய்ந்து நிற்கவில்லை.  யாருமே வேண்டாம் தன் வாழ்வில் என்ற முடிவுக்கு வந்தவள் வேகமாக உடல்நிலை தேறி எழுந்தாள்.  

ஜீவன் உருகி நின்றேன் Tempat cerita menjadi hidup. Temukan sekarang