அயன்மிகன் இந்தியாவுக்கு வர துணிந்ததற்கு ஒரு முக்கிய காரணம் மனைவியின் தைரியம் மட்டுமல்ல அவளின் எதையும் தாங்கும் குணமும்தான். தன் தகப்பன் நோய்வாய் பட்டுவிட்டார் என்று அதையே நினைத்து வெறும் கண்ணீரோடு நின்றுவிடாமல் அதற்காக அவள் எடுத்த முடிவு! கிஷோர் அவளுக்கு கொடுத்த டார்ச்சர் எல்லாவற்றையும் அவள் கடந்துவந்த விதம்! அதன் பிறகு அவளை கொலை செய்ய முயன்றவனுக்கே மனைவியாகி அவனையே தனக்குள் அடக்கியவள்! பலத்த அடி விழும் போதெல்லாம் அந்த அடிபட்ட சுவடு தெரியாமல் எழுந்து நின்றவள் என்ற தைரியம் இவனை அவளுக்கு சிறைவாசத்தில் இருந்து விடுதலை கொடுக்க வைத்தது வர போகும் ஆபத்தை அறியாமல்.
கிஷோர் எவ்வளவு வெறியோடு இருந்தானோ, அதே வெறியுடன் அவனின் தாயார் சகுந்தலாவும் இருந்தாள். அயன்மிகன் ஒரு சிறிய பார்டி மாதிரி வைத்து தன் மனைவியையும், மகளையும் அறிமுகப்படுத்தினான். அது பெரிய செய்தியாக வளம் வந்தது. இரண்டு வருடத்திற்கு முன் கிஷோருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக காணாமல் போனவள் இப்போது அயன்மிகனுக்கு மனைவியாகவும், அவனின் குழந்தைக்கு தாயாகவும் வந்திருப்பது பலருக்கும் பல யூகத்துக்கு வழி வகுத்தது. அயன்மிகன் மேல் குற்றம் இருப்பதாகவே எல்லோருக்கும் படவே அதையே தனக்கு சாதகமாக்கினான் கிஷோர். குற்றவாளியாக அயன்மிகன் முன் நிறுத்தப்பட அதை ஒரே அறிக்கையில் தவிடு பொடியாக்கினாள் அவனது மனைவி.
தமிழ்மொழி மீது பற்றுக்கொண்டு பிற மொழி படிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த தன் மனையாள் தெள்ள தெளிவான ஆங்கிலத்தில் பேட்டி கொடுத்ததை நம்ம முடியாமல் பார்த்தான் அயன்மிகன்.
"என் கணவரை நான் காதலித்தேன். தொழிலில் ஏற்பட்ட போட்டியால் என் பெற்றோரை முன்னிறுத்தி என்னை அவரிடம் இருந்து பிரித்து ஒரு நிச்சயதார்த்த நாடகம் ஆடி இவர் மேல் இருந்த கோபத்தில் என்னை பல முறை வேறு ஆளை போல கொலை செய்ய முயன்றான் இந்த கிஷோர். அதனால் சந்தர்ப்பம் வாய்த்த போது நான் என் காதலருடன் சென்று அவரை மணம் முடித்து ஒரு குழந்தைக்கு தாயாக திரும்பிவந்துள்ளேன். இரண்டு வருடம் நான் இங்கே வராமல் இருந்ததற்கு காரணம் இவனால் எனக்கு ஏதாவது ஆபத்து வந்துவிட கூடாதே என்றே எண்ணத்தில்தான். அப்படியே காலம் முழுவதும் இருக்க முடியாது என்பதால் இப்போது நான் வந்திருக்கிறேன். இதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்கள் கிஷோரின் மனைவி மஹியாவிடம் கேட்டுகொள்ளுங்கள் இவர்கள் இருவரின் திருமணமும் எப்போது பேசி முடிக்கப்பட்டது என்று. எனக்கும் கிஷோருக்கும் நடந்த நிச்சயத்தார்த்தம் ஒரு திட்டமிட்ட நாடகம். தான் காதலித்த பெண்ணை துன்புறுத்தியதால் ஒரு உண்மையான காதலனாக என் கணவர் அதற்கான பதிலை தொழில் ரீதியாக அவனுக்கு கொடுத்தார். இதில் என்ன தவறு இருக்கிறது?" என்று அவள் கேட்க இவளின் திடமும், தெளிவான பேச்சும் அதை உண்மை என்று எல்லோரையும் நம்ப செய்தது.
ČTEŠ
ஜீவன் உருகி நின்றேன்
Romanceகாதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்னில் நீ.