அத்தியாயம் 4

1.6K 78 7
                                    

ஒரு ஊரே ஒன்றாக குடி ஏறினால் கூட அசால்டாக தங்கலாம், அந்த அளவுக்கு அந்த பங்களா பெரிதாக இருந்தது.  ஆனால் அதில் இரெண்டே பேர்கள்தான் இருந்தார்கள்.  ஒன்று கிஷோரின் தந்தை ரத்தன், மற்றும் அவரது மனைவி சகுந்தலா.  

'இவங்க ரெண்டு பேரு தங்க இவ்வளவு பெரிய வீடா!' என்று தனக்குள் வியந்த யாழ்மொழி அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அந்த இரு பெரியவர்களை பார்த்து சிரிப்பதா இல்லை சும்மா நிற்பதா என்று தெரியாமல் நின்றாள்.  

"நீ சொன்ன பொண்ணு இதுதானா!" என்று ரத்தன் சற்று நேரத்திற்கு முன் அவரது மகன் இவளிடம் பேசிய குரலிலேயே கேட்க 

'சரிதான் எல்லாம் இருப்பை விழுங்கிய கேஸுக போல.' என்று அதற்கும் இவள் மனம் ஒரு விமர்சனத்தை வைக்க 

'அடச்சீ சும்மா இரு' என்று தன் மனதை அடக்கினாள் யாழ்மொழி.

"எஸ் டாடி!" என்று கிஷோர் கூற 

"இவ சரிபட்டு வருவான்னு எனக்கு தோணல! ஒரு மரியாதை கூட தெரியலையே!" என்று சகுந்தலா இவள் இங்கு வந்ததை விரும்பவில்லை என்று வெளிப்படையாக தெரியும் படி பேச 

"இவ மரியாதை நமக்கு எதுக்கு! எல்லாம் வரும் போது நமக்கு ஏற்ற மாதிரி, நம்ம தேவைக்கு ஏற்ற மாதிரி வராது. நாமதான் அதை நமக்கு தகுந்தார் போல மாற்றி அமைக்கணும்." என்றான் ரத்தன், இரும்பு குரலில் சொந்தக்காரர்.  

'இதுக வடக்கே உள்ளதுகளா இருக்குமோ ! வந்த நேரத்தில் இருந்து என்னவோ ஆட்டை, மாட்டை சொல்லுவது போல அது, இதுன்னு பேசிட்டு இருக்குதுக! சை.. இதுக கூட சேர்ந்து நமக்கும் அந்த பேச்சே வந்துட்டு போலையே! ஆங் வந்தா வந்துட்டு போகட்டும்! இந்த கேஸுகளுக்கு இதுவே அதிகம்!' என்று இவள் மறுபடியும் தனக்குள் பேசிக்கொண்டாள்.  இவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று தெரியாமல் இவளைப்பற்றிய பேச்சே அங்கே நடந்துக்கொண்டு இருந்தது.

'என்ன பேசிட்டு இருக்காங்க, கவனிக்கலையே!' என்று மானசீகமாக தனக்கு ஒரு கொட்டு வைத்தவள் அவர்கள் பேச்சை கூர்ந்து கவனிக்கலானாள்.  அதற்கு முன் எதற்குள் இருக்கட்டுமே என்று அவர்களுக்கு ஒரு வணக்கத்தை வைத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.

ஜீவன் உருகி நின்றேன் Onde histórias criam vida. Descubra agora