"என்ன யாழு ஒரேடியா வாசலையே பார்த்த மாதிரி இருக்கு. மணியை பார்த்தியா ராத்திரி பத்து ஆக போகுது. இதுக்கு பிறகும் உன் ஆளு வருவான்னு நினைக்கிறியா? வரதா இருந்தா இதுக்குள்ள வந்திருப்பான்." என்று ஆனந்த் கேலியாக கூற
'அதான் எனக்கு தெரியுமே! அவன் எங்கே வரபோறான்? இருந்தாலும் இந்த கண்ணும், மனசும் சொன்னா கேட்குதா என்ன?' என்று அவள் மனதிற்குள் பேசிக்கொண்டு இஷ்டம் இல்லாமல் இன்னும் இங்கேயே இருந்து இவனின் கேலி பேச்சுக்கு ஆளாக வேண்டுமா என்ற எண்ணத்தில் எழுந்தாள் யாழ்மொழி ஆனந்த்தை முறைத்தப்படி.
"என்ன முறைப்பு? உள்ளதைத்தானே சொன்னேன். நேத்து நைட் போனில் பேசின்னான்னு நீ இப்படி பேராசைபடலாமா?" என்று ஆனந்த் மீண்டும் அவளை கலாய்க்க
"ம்" என்று வாயை மூடு என்பது போல செய்கை செய்துவிட்டு
"எல்லாம் அந்த நெட்டைகொக்கை சொல்லணும். இந்த தடிமாடு எல்லாம் கேலி பண்ணும் அளவுக்கு ஆகிபோச்சு என் நிலைமை." என்று கூறிக்கொண்டே தன் அறைக்கு செல்ல திரும்பியவளை கையை பிடித்து நிறுத்தினான் ஆனந்த்.
"கோபப்படாதே, கோபப்பட்டால் உடம்புக்கு ஆகாது பேபி டால்." என்று ஆனந்த் சிரித்துக்கொண்டே கூற யாழ்மொழிக்கு நல்ல நல்ல வார்த்தை எல்லாம் வந்தது வாயில் அவனை திட்ட. அதற்குள்
"டேய், என்ன உடம்பு விறுவிறுன்னு வருதா என்ன?" என்று கேட்டப்படி வந்தான் அயன்மிகன் கோட்டை தோளில் போட்டப்படி.
"ஹய் ஏஞ்சல்!" என்றவள் ஆனந்த்தை பார்த்து "வெவ்வவ்வே" என்று விரலை மடக்கி காட்டிவிட்டு போனாள். ஆனந்த்க்கு அயன்மிகன் வந்தது ஆச்சரியமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சிரித்தான்.
"எப்படிடா வந்த? ஒரு தகவலும் கொடுக்கல. நான் பிக்கப் பண்ண வந்திருப்பேனே!" என்று ஆனந்த் கேட்க
"அது இருக்கட்டும். நீ அவளை எப்படி கூப்பிட்ட?" என்று அயன்மிகன் கேட்க வந்த சிரிப்பை அடக்கிய ஆனந்த்
VOCÊ ESTÁ LENDO
ஜீவன் உருகி நின்றேன்
Romanceகாதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்னில் நீ.