அத்தியாயம் 19

1.5K 61 1
                                    

"எப்படி இது சாத்தியம்? இப்படி பிடித்திருந்தான் அவன்.  அதற்கு அவள் எதுவுமே சொல்லவில்லையே! கண்டிக்கும் ஒரு பார்வை கூட இல்லையே! அவளை கூப்பிடுவதற்காக சில நேரம் என் கை அவள் மேல் பட்டால் நாசுக்காக விலக்குவாளே! அதனால்தான் நான் அவளைவிட்டு சற்று ஒதுங்கியே இருப்பது.  இப்போ மட்டும் எப்படி சும்மா இருக்கிறாள்? அவனும் என்னவோ பலநாள் பழக்கம் போல தூக்கி இடுப்பில் வைச்சிட்டு போகாத குறையாக போகிறான்." என்று ஆனந்த் தனக்குள் குழம்பியும், புலம்பியும் சோர்வாகி போனான்.   

இவனை புலம்பலுக்கு ஆளாக்கிவிட்டு மறுநாள் அயன்மிகன் கிளம்பி இந்தியா சென்றுவிட்டான். இந்த முறை அவளிடம் சொல்லிவிட்டு போனான்.  அவன் போன கவலையில் அவள் ஒரு நேரம்  சாப்பிடக்கூட இல்லை.  ஆனந்த் திட்டிய பிறகுதான் சாப்பிட்டாள். என்னவா இருக்கும்? என்ற யோசனையிலேயே ஆனந்தின் நாட்கள் சென்றது.  

"ஆனந்த் நான் டாக்டரிடம் பேசிட்டேன்.  அந்த விஷத்துக்கு மாற்று மருந்தை கண்டு பிடிச்சிட்டேன்.  அவருக்கு எல்லா விவரமும் அனுப்பியிருக்கேன்.  கொஞ்சம் ஃபாலோ பண்ணிக்க." என்று அயன்மிகன் போன் செய்ய 

"டேய் முட்டாள் என்ன செய்து வச்சிருக்க? இனி உன்னை அவன் ஈஸியா கண்டு பிடிச்சிடுவான்." என்று ஆனந்த் பதற 

"பிடிச்சா பிடிச்சிட்டு போறான்.  அவனுக்கு பயந்து சாக சொல்றியா? அவன் ஒரு மனுஷன்னு இவளை சாக விட சொல்றியா?" என்று அயன்மிகன் கூற  ஆனந்த் எப்படி கூற முடியும் 'அவ எப்படி போனா என்ன?' என்று.  அவளை வைத்துத்தானே இவன் ஒரு புது பிளான் போட்டு வைத்திருக்கிறான்.  அதையும் தாண்டி இவன் அப்படி கேட்டாலும் விடுகிறவனா எதிரே பேசிக்கொண்டு இருப்பவன் என்று நினைத்தவன் 

"மருந்தை கண்டுபிடிச்சுத்தான் ஆகணுமுன்னா எங்கிட்ட சொல்லியிருக்கலாமே!" என்று ஆனந்த் கூற 

"நான் ரொம்ப சீக்ரட்டாதான் கண்டுபிடிச்சேன்.  நான் இதுல நேரடியா இன்வால்வ்  ஆகல.  அதனால நீ பயப்படாதே! அதுமட்டுமல்ல எனக்குன்னு வரதை நான்தான் எதிர்கொண்டு ஆகவேண்டும்.  நீ அவளை பார்த்துக்க.  இன்னும் கொஞ்ச நாளில் அவளை அவ அப்பா, அம்மாட்ட அனுப்பிவிடலாம்." என்று இவனின் சந்தேகத்தில் ஒரு லாரி தண்ணீரை ஊற்றினான் அயன்மிகன்.  

ஜீவன் உருகி நின்றேன் Onde histórias criam vida. Descubra agora