அத்தியாயம் 9

1.8K 78 16
                                    

இருளோடு இருளாக மரத்தில் சாய்ந்து கண்ணயர்ந்து போயினர் யாழ்மொழியும் அவளது ஏஞ்சலும்.  சற்று நேரம் சென்றிருக்க 

"ஏஞ்சலு... ஏய் ஏஞ்சலு" என்றது  அவளது பலமற்ற குரல்.  அது அவனுக்கு கேட்கவில்லை,  அவளது கை இவன் மேல் விழவும்தான் விழிப்பு வந்தது அவனுக்கு.  

"என்ன பொம்ம?" என்று இவன் தூக்க கலக்கத்தில் கேட்க 

"ஏஞ்சல் என்னவோ காலுல ஊருர மாதிரி இருக்கு." என்று இவள் கூறவும் 

"என்ன?" என்று பதறிக்கொண்டு டார்ச்சை அடித்தவன் கொஞ்சம் ஆடி போனான்.  அவள் காலை ஒட்டி  ஒரு பெரிய பாம்பு நெளிந்துக்கொண்டு இருந்தது. டார்ச்சை வேறு பக்கம் அடித்தவன் 

"பொம்ம பயப்படாமல் அமைதியா, அசையாமல் இரு. நான் ஏதாவது கம்பு கிடைக்குதான்னு பாக்குறேன்." என்று அவன் சத்தம் எழுப்பாமல் எழ முயற்சிக்க 

"போகாதே! பாம்புதானே!" என்றவள் அவன் கையை பிடித்து அவனை செல்லவிடாமல் தடுத்துக்கொண்டு இன்னொரு கையால் அந்த பாம்பை பிடித்து தள்ளி வீசினாள்.  

"ஏய் முட்டாள் பொண்ணே! என்னடி செய்யுற நீ?" என்றவன் அவளின் கையை பிடித்து அழுத்தமாக துடைத்தான்.  டார்ச்சை எடுத்து அவள் காலை ஆராய்ந்தான்.

"என்ன பண்ணுற?" என்று அவள் காலை இழுத்துக்கொள்ள முயல 

"சும்மா இரு.  சொல்ல சொல்ல கேட்காம என்னவோ வாட்டர் பெட்டில் படுப்பது போல தரையுல படுத்து உருளுற! பாம்பு கடிச்சிருக்கானு பார்க்க விடு." என்று இவன் கூற 

"கடிச்சா வலிக்குமே! எனக்கு ஒன்னும் செய்யல.  கடிச்சிருக்காது விடு" என்றாள் அவள்.  அவன் அவள் பேசுவதை காதிலேயே போட்டுக்கொள்ளாமல் காலை நன்றாக ஆராய்ந்துவிட்டு, எழுந்து சுற்றும் முற்றும் டார்ச் அடித்து பார்த்தான்.  

அவன் என்ன செய்கிறான் என்று கேட்க கூட அவளுக்கு உடம்பில் தெம்பு இல்லை.  வீம்பாக அவனை தவிர்த்துவிட்டு தரையில் தனியே  அமர்ந்தவளுக்கு  குளிர் ஆட்டி படைத்தது.  அவன் கொடுத்த கதகதப்பில்தான் இவ்வளவு தூரம் தாக்கு பிடித்திருக்கிறோம் என்று புரிந்தாலும் தானாக அவனிடம் கேட்க தயக்கம்.  அதனால் அப்படியே இருந்து அதிகமான நடுக்கத்தை இழுத்துவைத்து கொண்டாள், பேச கூட தெம்பு இல்லாத அளவுக்கு.  

ஜீவன் உருகி நின்றேன் Donde viven las historias. Descúbrelo ahora