அத்தியாயம் 22

1.4K 65 3
                                    

'காதல் வந்தாலே கண்ணோடுதான்
கள்ளத்தனம் வந்து குடியேறுமோ!' 

ஒரு கைத்தட்டி ஓசை வராது என்று சில அறிவாளிகளிடம் சொன்னால் உடனே சொடக்கு போட்டு காட்டுவார்கள், ஓசை வருகிறது என்று.   அதுபோல முடியாது என்று ஒன்று இல்லை என்று நினைப்பவர்களுக்கு எல்லாமே கைகெட்டும் தூரம்தான்.  அப்படி நினைத்துக்கொண்டு யாழ்மொழியின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது அயன்மிகன் கையில் தன் கையை வைத்துக்கொண்டு.  

இன்றைய அவசர உலகில் எல்லோருக்குள்ளும் ஒரு குணம் பெருகி வருகிறது.  அதுதான் முடிவு எடுப்பதில் தடுமாறுவது.  பலநேரம் நீண்ட நேரம் ஆராய்ந்து, நல்லது கேட்டதை தரம் பிரித்து பலவாறு யோசித்து கடைசியில் தவறான முடிவை மிக எளிதாக எடுப்பது. அதிகமான அறிவும் சில நேரம் ஆபத்துக்களைத்தான் கொண்டுவரும்.  இது அயன்மிகனுக்கு மிகவும் பொருந்தும்.  அவனுக்கு எண்ணம் இவனின் மறுப்பை அவளுக்கு நாசுக்காக தெரிவிக்கவேண்டும், ஆனால் அவளுக்கு அது எந்த வருத்தத்தையும் கொடுக்ககூடாது.  அது முடியுமா? அடியும் விழவேண்டும், ஆனால் கம்பு உடையக்கூடாது என்று எதிர்பார்த்தால் முடியுமா? அவள் வருந்தக்கூடாது என்று இவன் நினைத்து செய்யும் இந்தமாதிரியான சிறிய சிறிய செயல் அவள் மனதில் என்னமாதிரியான ஒரு நம்பிக்கையை உருவாக்குகிறது என்று தெரியாமல் அவன் அவனுடைய மனம் சொல்வது போல நடந்தான்.  

இறங்கும் இடம் வரையும் அந்த காதல் இல்லாத ரோமியோ மூடியிருந்த தன் உள்ளங்கையின் விரல்களை ஒவ்வொன்றாக திறந்தான்.  அதுவும் அவளுக்கு புதிதாக ஒரு செய்தி சொல்ல, அவளின் இதயத்தில் அவன் காதலானாக படிந்து போனான்.  காதல் இல்லாமல் இந்தமாதிரி எவன் நடந்துக்கொள்வான்.  தன் காதலை அவன் மறைமுகமாக வெளிப்படுத்திருகிறான் என்று அவள் மனக்கோட்டை கட்ட இவனின் மனதிலோ 'பாவம், சின்ன பெண்' என்று எண்ணம்.  சின்ன பெண் குமரியாகி நாளாகிறது என்று புரியத்தவறிவிட்டான் இவன்.  இவன் தங்கையின் வாழ்க்கையில் செய்த அதே தவறை செய்கிறானோ மீண்டும்! பெண்ணின் மனதை அறியாமல் சின்ன பெண் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கிறானோ! 

ஜீவன் உருகி நின்றேன் Donde viven las historias. Descúbrelo ahora