"அயன் நிஜமாலுமே இதைத்தான் செய்ய போறியா? ஆனால் இதெல்லாம் சரிவருமான்னு தெரியலையே! யாழு உங்கிட்ட இதைப்பற்றி பேசினாளா என்ன? இப்படி ஏதாவது செய்யுன்னு நான் சொன்னப்ப நீ கேட்கவே இல்லையே! அவ சொன்னதும் அதைப்போலவே செய்ய போறேன்னு நிக்குற. இதுக்கு பேரு காதல் இல்லாமல் வேறென்ன?" என்று ஆனந்த் அயன்மிகனிடம் கேட்க
"நீ சுத்தி சுத்தி அதிலே வந்து நிக்காதே! நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை. நான் என் குழந்தைக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன் என் குழந்தை கூடவே இருப்பேன்னு. அதுக்காகத்தான் இந்த முடிவு." என்று அயன்மிகன் கூற
"உனக்கு எப்பவுமே உன் குழந்தைத்தான் முக்கியமா?" என்று கேட்டான் ஆனந்த் யாழ்மொழி மீது இருந்த பாசத்தில்.
"ஆமாம். அது என் இரத்தம்!" என்று கூறிவிட்டு அயன்மிகன் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற பேச்சுக்கு தாவ அங்கேயே ஆனந்த் இந்த பேச்சை கைவிட்டான்.
கோடி கோடியாக பணத்தை கொட்டி வைத்திருக்கும் எல்லோரும் அதை நல்ல வழியில் சம்பாதித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பணம் கொட்டும் தொழிலை காப்பாற்ற தெரிந்தும் தெரியாமலும் ஆயிரம் கோல்மால்கள் செய்வார்கள். எதுவுமே செய்யாவிட்டாலும் வருமான வரித்துறையாவது எவ்வழியிலாவது ஏமாற்றுவார்கள். அப்படி எதுவும் இருக்குமா என்ற ஆராச்சியில் அயன் மறைமுகமாக இறங்க, தோண்ட தோண்ட கிஷோர் குடும்பத்தில் புதையலைபோல குற்றம் குவிந்துக்கிடந்தது. ஆனால் எதற்குமே சாட்சி இல்லை. பணம் அங்கே எல்லோரின் வாயையும் அடைத்திருக்க அதை திறப்பது எப்படி என்று யோசித்தான் அயன்மிகன்.
முதலில் வருமான வரித்துறையை கிளம்பிவிட்டவன் அதன் பின்னே அவர்கள் தொழில் ஒவ்வொன்றையும் பற்றி விசாரித்தான். எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி நடைப்பெற்ற முதல் சோதனையிலேயே சில குறிப்பிட்ட ஆதாரம் கிடைக்க மேலோட்டமாக இதை பார்த்த ஆபிஸர்கள் இதை ஆழாமாக தோண்டி துருவ தொடங்கினார்கள். சில பொய் கணக்குகளை காட்டி இவர்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவர இவர்களின் சில சொத்துக்கள் முடக்கப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் பயப்படுற ஆள் இல்லை ரத்தன், கிஷோரின் தந்தை . எல்லாவற்றையும் அடிக்க வேண்டிய இடத்தில் அடித்து ரெயிட் பண்ண வந்தவரே 'இவர் குற்றமற்றவர்' என்று கூறிவிட்டு செல்லும்படி செய்துவிட்டார்.
ŞİMDİ OKUDUĞUN
ஜீவன் உருகி நின்றேன்
Romantizmகாதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்னில் நீ.