"என்னடா சொல்ற?" என்று ஆனந்த் அதிர்ச்சியுடன் கேட்க
"ஷ்ஷு..." என்று தன் உதட்டில் விரல் வைத்து கூறியவன் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த அறையையில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தான் வேறு யாரின் நடமாட்டம் இருக்கிறதா என்று. வேறு யாரையும் அவன் பார்க்கவில்லை யாழ்மொழி வருகிறாளா என்றுதான் பார்த்தான். யாருமில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு
"இப்போ உனக்கு ஏன் இவ்வளவு அதிர்ச்சி? நான்தான் போனமுறையே சொல்லிட்டு போனேனே அந்த கிஷோரை இனி நான் நேரடியாக தாக்க போகிறேன் என்று. இவளால்தான் என்னால் அதை செய்யமுடியவில்லை. முன்பு நீ குறுக்கே சாடின. இப்போ இவ சாடுரா. இதுவரைக்கும் நீ சொன்னதை நான் கேட்டேன். இனி நான் கேட்கபோவதில்லை. கிஷோரின் மரணத்தில் நான் நேரடியாக சம்பந்தப்பட்டால் அவந்திகாவின் மரணம் விவாதப்பொருளாகும் என்பதற்காகத்தான் நான் இதுவரை மறைந்து இருந்து தாங்கியது. அதுவும் நீ கொடுத்த ஐடியா சுத்த சொதப்பல். நன்றாகத்தான் வேலை செய்தது ஆரம்பத்தில். ஆனால் அதற்கும் அவன் கண்டுபிடித்தான் பார் ஒரு குறுக்குவழி. அதுதான் இப்போ எனக்கு பெரிய தலைவலியாக இருக்கு. அந்த தலைவலிக்கு விடுதலை கொடுக்கவேண்டுமென்றால் நான் நேரடியாக அவன் முன்னே சென்று நிற்க போகிறேன். இனி நீ என்ன காரணம் சொன்னாலும் நான் கேட்கபோவதில்லை.
உன்னிடம் எதையும் மறைக்க கூடாது என்று நான் எல்லாவற்றையும் பகிர்ந்தால் நீ அதை தடுக்க வழி தேடுற. என் காத்திருப்பு பொறுமையை தாண்டிவிட்டது. சரியான சந்தர்ப்பம் வாய்க்கும் போது நிச்சயம் இனி நான் நினைத்தது நடக்கும். அவன் மூன்று மாத டூராக வெளிநாடு செல்கிறான். மே பி வேற நாட்டுக்கு சென்று கல்யாண முடிக்க திட்டமிட்டு இருக்கலாம். என்ன ஆனாலும் என்னை தடுக்க முடியாது. உன்னாலே முடியாது என்று ஆகிற போது அவளையும் நீ தடுத்து வைப்பாய் என்று நம்புகிறேன்." என்று அயன்மிகன் கூற
"அயன் ப்ளீஸ் அவளையும் கொஞ்சம் பாரு." என்று ஆனந்த் கூற
"அவளுக்காகத்தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். தெரிந்தோ தெரியாமலோ அவள் புலி வாலை பிடித்துவிட்டாள். இனி அவளை காப்பது என்பது பெரிய சவாலான ஒன்று. அவன் கொடுத்த மருந்தில் இவன் இப்போது உயிரோடு இருக்கமாட்டாள் என்ற நம்பிக்கையில் அவன் இவள் பெற்றோருக்கு போட்டுவைத்த காவல் அனைத்தையும் விலக்கிவிட்டான். ஆனால் முழுவதுமாக என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இவள் இன்னும் உயிரோடு இருக்கிறாள் என்று அவனுக்கு தெரிந்தால் என்னை கண்டு பிடிக்க அவளை கொடுமை செய்வான், இல்லை கொன்றுவிடுவான். இரண்டுமே நடக்க கூடாது. இவள் இந்த வீட்டைவிட்டு போகும் போது அவன் இந்த உலகத்தில் இருக்க கூடாது. எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இவள் வாழ்க்கை போக வேண்டும்." என்று அயன் கூற
VOUS LISEZ
ஜீவன் உருகி நின்றேன்
Roman d'amourகாதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்னில் நீ.