அத்தியாயம் 26

2.1K 72 9
                                    

என்னவோ பக்கத்து ஊரில் இருப்பது போல இப்பவே வீட்டைவிட்டு வெளியே போ என்று அயன்மிகன் பிடிவாதத்தில் நிற்க, உள்ளே வீம்பு வந்தாலும் அதை காட்டும் நேரம் இதுவல்ல என்று யாழ்மொழி அவனின் பேச்சுக்கு பதில் கொடுத்துக்கொண்டு முறைத்த அவனின் கோபப்பார்வைக்கும் பதில் கொடுத்துக்கொண்டு நின்றாள்.  இருவரும் அப்படியே நிற்க 

"இப்போ என்னத்தான் சொல்ல வர?" என்று அவன் கேட்க 

"உனக்கு இருக்கும் எல்லா உரிமையும் எனக்கும் இருக்கு." என்றாள் இவள் பதிலுக்கு. இவள் பதில் புரியாமல் 

"என்ன உரிமை?" என்று இவன் கேட்க 

"ஆங் இதுதான்." என்று மீண்டும் அவனை இவள் கட்டிப்பிடிக்க 

"நீ என்ன பண்ணுறன்னு உனக்கு தெரியாதா? நான் கோபத்தில் இருக்கேன்.  ஆனால் நீ அதை மாற்ற எந்த வழியை கையாளுற?" என்று இவன் வெறுப்புடன் கேட்க 

"அதான் என் காதல் உனக்கு வேண்டாமே! அந்த பாஷை உனக்கு புரியாமல் போச்சே! இதாவது புரியுதான்னு பார்ப்போம்.  எல்லாம் என் நேரம்.  இப்படி ஒரு அரக்கனை காதலிச்ச பாவத்துக்கு இப்படி ஏங்கி சாவவேண்டியதிருக்கு.  என் மானமே போகுது." என்று இவள் கண்கள் கலங்க கூற 

"உன்னை யாரும் இதை செய்ய சொல்ல, மானம் போக." என்று அவன் முகத்தை திருப்பினான்.  

"நீ மட்டும் எல்லாம் செய்யலாமோ!" என்று அவள் கேட்க  அவன் பதில் சொல்லாமலேயே நின்றான் கோபத்தில்.  வாயை திறந்தால் தவறாக எதுவும் பேசிவிட கூடாது என்று.  

"மிகா இங்கே பாருடா.  பாருடா உன் பேபி டாலை. உன் பேபி டால் செத்தா உனக்கு எந்த கவலையும் இல்லையா?" என்று அவள் அவனின் முகத்தை தன்னை நோக்கி திருப்பி கேட்க  அவளின் கையை தட்டிவிட்டவள் 

"இல்ல" என்றான் கொஞ்சமும் இறங்காமல்.  

"என்ன இல்ல? என் கண்ணை பார்த்து சொல்லு 'பொம்ம நீ செத்தாலும் எனக்கு கவலை இல்லன்னு.' அந்த கிஷோர் என்னை மறுபடியும் எப்படியாவது கொல்லை செய்ய பார்க்கட்டும்.  மறுபடியும் பெரிய லாரி வந்து என்னை டமாலுன்னு முட்டி ரோட்டுல தூக்கி எரியட்டும். என் இரத்தம் எல்லாம்..." என்று கூறிக்கொண்டே போக சட்டென்று இவளின் வாயை கையால் மூடியவன் 

ஜீவன் உருகி நின்றேன் Tempat cerita menjadi hidup. Temukan sekarang