அத்தியாயம் 8

1.7K 71 4
                                    

"டால் முழிச்சிக்கோ! இங்கே தண்ணீயை எங்கே போய் தேடுவேன் நான்.  ஒழுங்கா முழிச்சிக்கோ, இல்ல உன்னை தனியா விட்டுட்டு தண்ணி தேடி போயிடுவேன் நான்.  பெரிய காடு இது.  மரம் எல்லாம் ரொம்ப நெருக்கம் நெருக்கமா இருக்கு.  எந்த காட்டு  மிருகமும் வரலாம்." என்று அவன் அவளை பயங்காட்டி கண்ணை திறக்க வைக்க முயல ஏற்கனவே பயத்தில் இருந்தவள் இன்னும் அதிகமான பயத்தில் அவனுக்குள்ளே சென்றுவிடுவது போல நுழைந்தாள். 

"ஈஸி...ஈஸி டால்.  நான் எங்கேயும் போகல. பயப்படாதே" என்றவன் அவளின் ஜில்லிட்ட கைகளை தேய்த்துவிட்டு தலையை மென்மையாக வருடினான்.  

"இதுதான் சொர்க்கம் போல.  பரவாயில்லை நான் ரொம்ப நல்லவ போல.  செத்தவுடனே எனக்கு சொர்க்கம் கிடைச்சிடுச்சு. சொர்க்கத்துல ஒரு நல்ல தேவதையையும் தந்திருக்காங்க என்னை பார்த்துக்க. ஆனால் குரல் ஆண் மாதிரி இருக்கு.  ஆண் தேவதை போல.  ஆண் தேவதையை என்னன்னு சொல்லனும்? தேவதைக்கு ஆண் பால் என்ன? நம்ம தமிழ் வாத்தியார் சொல்லி தரலையே! அவர்தான் சந்தேகம் கேட்டாலே கையில் பிரம்பை எடுத்துவிடுவாரே பிறகு எப்படி அவரிடம் கேட்க? ஒரு வேலை தேவனாக இருக்குமோ!  என்னவாகவும் இருந்துவிட்டு போகட்டும்! எனக்கு இது தேவதை.  நாம வேணா ஏஞ்சலுன்னு இங்கிலிஷீல் கூப்பிட்டுக்கலாம்.  நல்ல ஏஞ்சல்!" என்று தனக்குள் பேசியவள் ஏஞ்சலை இன்னும் நெருக்கமாக அணைக்க ஏஞ்சல் கொஞ்சம் திணறி போனது.  

"டால்.." என்றது ஏஞ்சல் கொஞ்சம் அதட்டலாக யாழ்மொழியின் காதில்.

"ஆஆ...." என்று அவள் ஒலியின் வேகத்தில் காதை பொத்த அவளின் மயக்க நிலை கலைந்தது.  ஆனாலும் கண்ணை திறக்கவில்லை அவள்.  அவள்தான் எப்போதோ செத்து போய்விட்டாளே!!! 

"என்ன?" என்றாள் உடலை வளைத்து முறுக்கிக்கொண்டு. குளிர் பரவியிருந்த அவள் உடலில் லேசாக சூடு தெரிந்தது அவனுக்கு.  அவளுக்கு காய்ச்சல் ஏறுகிறது என்று புரிந்துக்கொண்டான் அவன்.  

"அமைதியா இரு" என்றான் அவன் லேசாக அவளை விலக்க முயன்றுக்கொண்டு.  

ஜீவன் உருகி நின்றேன் Donde viven las historias. Descúbrelo ahora