அத்தியாயம் 10

1.6K 72 2
                                    

அழுகை ஒன்றும் யாழ்மொழிக்கு புதிது அல்ல. அவள் அடிக்கடி தனக்குள் பேசிக்கொள்ளும் பழக்கம் வந்ததே அழுகையை நிறுத்த அவள் தேடிய வழிகளில் ஒன்றுதான். கஷ்டம் யாருக்குத்தான் இல்லை. பணம் இருப்பவனுக்கு ஒருவித கஷ்டம், இல்லாதவனுக்கு ஒருவித கஷ்டம். அதற்காக கஷ்டம் வரும் நேரமெல்லாம் கண்ணீரை வடித்துக்கொண்டே இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? இல்லை கஷ்டம்தான் வரமால் இருக்குமா? கண்ணீர் சில நேரம் சாதிக்க வழிகாட்டும், பல நேரம் கேலிக்கு உள்ளாகும். அப்படி ஒரு நிலை வந்துவிட கூடாது என்றுதான் எந்த கஷ்டம் வந்தாலும் அதை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளாமல் தனக்குள் பேசியே அந்த சூழ்நிலையை கையாளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டாள் யாழ்மொழி. ஆனால் இப்போது அந்த பழக்கம் கை கொடுக்கவில்லை. எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வு பலனளிக்காதே!

இப்போது யாழ்மொழிக்கு வந்த கஷ்டம் என்னவென்றால் கடந்துவந்த பாதைதான். மூன்று மாதங்கள் கிஷோரின் வீட்டில் இருந்திருக்கிறாள். அங்கே இவள் யாரிடமும் இப்படி பேசியதே இல்லை. யாரிடம் பேச? அவளுக்கு அங்கே சிறை வாசம்தானே! தாயாரிடம் போனில் பேசும் நேரத்தான் இவள் வாய்திறந்து பேசும் நேரம். எப்போதாவது கிஷோர் வந்து கேள்விகேட்டு பதிலையும் அவனே சொல்லிவிட்டு போவான். பதிலுக்கு பேசுவாள் அவ்வளவுதான். நன்றாக அறிந்தவர்களுடன், தெரிந்தவர்களுடன் பேசி மகிழ்ந்து இருந்த பெண்ணை உமையாக்கி அந்த கிஷோர் சிறைவைத்திருக்க அதை இவன் இப்போது வேறு விதமாக நியாபகப்படுத்திவிட அதை நினைத்து அவள் கண்ணீர் வடித்தாள். அதையும் இவன் தவறாக புரிந்துக்கொண்டான்.

"ஏய் அவன் மேலே உனக்கு அப்படி ஒரு ஈர்ப்பா?" என்று இவன் அதட்டலாக கேட்க

"எவன் மேலே? எவன் மேலேயும் எனக்கு எந்த ஈர்ப்பும் இல்லை. பேசுறது ஒரு தப்பா. போ இனி உன் கூட பேசவேமாட்டேன். நீயும் பேசாதே!" என்று இவள் கூற அவனுக்கு ஒருநிமிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. இவன் ஒன்று நினைக்க, அவள் வேறு எதற்காகவோ அழுகிறாள்.

ஜீவன் உருகி நின்றேன் Donde viven las historias. Descúbrelo ahora