கர்ப்ப கால ஆசைகள் என்பது பெண்களுக்கு பெண்கள் வேறுப்படும். உண்ணும் உணவில் இருந்து கணவனை பார்க்கும் பார்வை முதல் எல்லாமே வேறுபடும். கணவன் என்று வந்துவிட்டால் சில பெண்கள் தன் கர்ப்பத்திற்கு காரணமானவனை பார்க்கும் போதெல்லாம் கோபம் கொள்வார்கள். 'இவனால்தானே எனக்கு இவ்வளவு கஷ்டம்' என்ற ஒரு எண்ணம் அவர்கள் மனதில் இருக்கும் கர்ப்பக்கால உபாதைகளை அனுபவிக்கும் போது. கணவனை பார்த்தாலே கடித்து குதறும் மனநிலையில் இருப்பார்கள். சில பெண்களுக்கு தாயாரை கூட அந்த நேரத்தில் தேடாமல் கணவனை மட்டுமே தேடி தவிப்பார்கள். பொதுவாகவே நம்முடைய வேலையத்த மனதிற்கு என்ன வேலையென்றால் கிடைக்காததற்கு அதிமாக ஏங்கி தவிப்பது. இப்போது யாழ்மொழி நிலையும் அப்படித்தான் இருந்தது.
இருக்கும் தவிப்பு போதாது என்று தேவையில்லாத நேரத்தில் எல்லாம் அவனுடன் கழித்த அந்த ஒரு நாள் இரவு அடிக்கடி மனதில் வந்து போய் அது வேற கூடுதல் இம்சை கொடுக்க அவள் நாளுக்கு நாள் சோர்ந்து காணப்பட்டாள். ஆனந்தும் தமிழினியும் அவளை தரையில் விடாமல் தாங்கினாலும் 'உன் சங்காத்தமே வேண்டாம்' என்று இந்தியாவிலேயே இருந்துக்கொண்டவனை தேடி மனம் ஏங்க தொடங்கியது. தன்னை சுற்றி அத்தனையும் இருந்தும் இல்லாத ஒன்றுக்கு தவித்து இருக்கும் அனைத்தையும் 'வேண்டாம், வேண்டாம்' என்று கூறலானாள். பெண்ணின் மனதில் இருக்கும் எல்லாவற்றையும் அறிந்துக்கொள்ளும் திறன் படைத்தவர் யாரும் இருக்கிறார்களா என்ன உலகில்!
குழந்தை தன் இருப்பை வெளியே காட்ட, இவளின் மேடிட்ட வயிற்றோடும் , தொலைவில் இருப்பவனின் நினைவோடும் இவளின் இரவு எல்லாம் சரியாக தூக்கம் இல்லாமேலேதான் கழியும். அன்றும் அப்படித்தான். தாயாருடன் பேசிக்கொண்டே படுத்திருந்தவள் தாயார் தூங்கிவிட தூக்கம் வராமல் படுத்திருந்தாள். தூக்கம் வராமல் போனால் கூட பரவாயில்லை, கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது. தாயார் அறியாமல் தனக்குள் அதை அடக்கியவளுக்கு ஒரு நிலைக்கு மேலே அது முடியாமல் போக எழுந்து மெல்ல தன் நினைவை ஆட்கொண்டவன் அறைக்கு சென்றாள். அவனின் மணம் அங்கே இருப்பதாக இவளுக்கு தோன்றும். அங்கே சென்றவள் அவனின் பொருட்களை ஒவ்வொன்றாய் தொட்டுப்பார்த்துக்கொண்டே வந்தாள். வாட்ரோப்பை திறந்து அவனின் உடையில் ஒன்றை எடுக்க நினைத்து அதை திறந்தவளின் கண்ணில் முதலில் பளிச்சென்று பட்டது ஒரு டீஷர்ட். அதை பார்த்தவளுக்கு பழைய நினைவுகள் கடகடவென்று வர தன்னை இழந்து நின்றாள். அவளால் அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அந்த நடுராத்தியில் இருந்து ஆசை தீர அழுதாள். ஆனால் என்றும் அழுதவுடன் தேறி விடுபவள் இன்று அதை எதிர்பார்த்து தோற்று போனாள். 'இனி நம்மால் முடியாது' என்று நினைத்தவள் தயங்கி தயங்கி அவனுக்கு வீடியோ கால் செய்தாள்.
ESTÁS LEYENDO
ஜீவன் உருகி நின்றேன்
Romanceகாதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்னில் நீ.