"எங்கிட்ட ஊரில் உள்ள அத்தனை கதையையும் விடுவா. அவ சொல்லும் கதையை கேட்டு என் காது சவ்வே கிழிஞ்சிடும். பிடிக்காட்டி கூட நான் பேசாம அதை கேட்டுட்டு இருப்பேன். சோத்து பண்டாரம் திங்குறதைப்பற்றியே பேசிட்டு இருப்பா. ஆனா இதைமட்டும் சொல்லாம இருந்துட்டா பாரேன்." என்று ஆனந்த் ஆயிரத்து நூற்றி பதினேழாவது முறை புலம்பிக்கொண்டு இருந்தான்.
தலையில் விதியே என்று கையை வைத்துக்கொண்டு அவன் புலம்பலை கேட்டுக்கொண்டிருந்த அயன் "எப்படி சொல்லன்னு நினைச்சிட்டு இருந்திருப்பா. இதெல்லாம் ஒரு மேட்டரா?" என்றான்.
"அப்போ உங்கிட்ட மட்டும் எப்படி சொன்னா? நீ மட்டும் ஆம்பிளை இல்லையா? நீ அவளை இங்கே விட்டுட்டு போகும் போது அவளை எனக்கு சுத்தமா பிடிக்கல. அப்புறமா போனா போகுதுன்னு பேசி பழக தொடங்கினேன். நல்லா பேசிட்டு இருந்தவ இதை மட்டும் சொல்லாம விட்டுட்டாளே!" என்று அவன் விட்ட இடத்தில் இருந்து தொடர
"ஐய்யா சாமி முடியல. இப்போ நீ இதை விட போறியா இல்லையா?" என்று அயன் கோபத்தில் கேட்க
"எப்படிடா விட முடியும். இப்படி ஒரு மாசம் எந்த பெண்ணுக்காவது நாள் வருமா? அதை வச்சுட்டு அவ எங்கிட்ட எதுவுமே சொல்லாம இருந்திருக்கா. அதனால அவளுக்கு ஏதாவது ஆயிருந்தா யாருடா அதுக்கு பொறுப்பு. நீ எங்கிட்டதானே கேட்டிருப்ப?" என்று ஆனந்த் பதில் கூற
"இப்போ அவளுக்கு ஏதாவது ஆயிருந்தா யாரு பொறுப்பு என்பது பிரச்சனையா? இல்ல உங்கிட்ட சொல்லாம எங்கிட்ட சொல்லிட்டா என்பது பிரச்சனையா?" என்று அயன் ஆனந்த்தை ஊடுருவும் பார்வையோடு கேட்க
"நான் இதைப்பற்றி இனி பேசல போதுமா?" என்று அமைதியாகிவிட்டான் ஆனந்த்.
இங்கே இருக்கும் தள்ளு முள்ளு தெரியாமல் ஒரு பாட்டை பாடிக்கொண்டே டைனிங் டேபிளுக்கு வந்தவள் அங்கே இருந்த உணவுகளை பார்த்துவிட்டு
"ஆனந்த் சார் டபுள் ஆஃபாயில் போட்டு தாங்களேன். மிளகு தூள் அதிகமா போடுங்க, மிளகாய் தூள் கம்மியா போடுங்க. இரண்டு சைடும் வேகவைச்சு தாங்க." என்றாள் ஜூஸை ஊற்றி குடித்துக்கொண்டு. ஆனந்த்க்கு வாய் படபடவென்று வந்தாலும் இவள் சொல்வதை கேளாதவன் போல இருந்துக்கொண்டான்.
VOCÊ ESTÁ LENDO
ஜீவன் உருகி நின்றேன்
Romanceகாதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்னில் நீ.