அத்தியாயம் 18

1.5K 66 4
                                    

யாருக்கு யார் என்று மனிதன் நினைத்தால் மட்டும் போதாது.  மனிதனின் சக்திக்கு அப்பாற்ப்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்பதற்கு சாட்சியை நாம் நம் வாழ்க்கையில் அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.  

தவறான ஒரு நபரை குறிவைத்து ஒரு பெண்ணை பழிவாங்க நினைத்தான், அது முடியாமல் தான் தேடிய பெண் இவள் இல்லை என்று தெரிந்த பிறகும் அவளை அப்படியே விட்டுவிட்டு போகாமல் அவளின் உடல் நலம், எதிர்காலம் என்று பினாத்திக்கொண்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? ஆனந்த் அயன்னை போல யோசிக்கவில்லை.  அவன் யதார்த்தமாக இருந்தான். யாரோ ஒரு பெண்.  இருக்கும் வரை  பார்த்துக்க வேண்டியதுதான்.  அதுக்காக அவளின் பிரச்சனையை தன் பிரச்னையை போல எல்லாம் நினைக்கமுடியாது என்று நினைத்தான்.  

ஆனந்த் சரியான வழியில் போவதாக நினைத்தான்.  அதனால் அவன் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை.   ஆனால் தன் தங்கைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக பழிதீர்க்க துடித்த ஒருவனுக்கு எந்த உறவும் இல்லாத வேறோரு பெண்ணின் நலனில் என்ன அக்கறை? என்ற சந்தேகம் ஆனந்திற்கு ஏற்கனவே மனதில் ஏற்பட்டிருந்தது.  அது தினம் தினம் வளர்ந்துக்கொண்டே போனது.  நிலவு தேய்ந்து வளருவது போல ஆனந்தின் சந்தேகமும் தேயும், மற்றும் வளரும்.  ஒருநாள் அயன் யாழ்மொழியின் மீது மிகவும் அக்கறை இருப்பது போல இருப்பான். இன்னொரு நாள் தீயான வார்த்தைகளை கொட்டி அவளை நோகட்டிப்பான். இதில் என்ன ஏது என்று எதை கண்டுப்பிடிப்பது? 

சோர்வாக இருக்கிறது என்று யாழ்மொழி சென்றுவிட 

"ஏண்டா அவட்ட கையை நீட்டுற? அவளே  நடக்க தெம்பு இல்லாம இருக்கிறா. அவட்ட போய் ஓடு, சாடுன்னுட்டு." என்றான் அயன்.  

"திட்டினா, அடிச்சா கஷ்டமாத்தான் இருக்கும்.  அவ  அதுக்கு ஏற்ற மாதிரி நடந்தா ஏன் திட்ட போறேன் அடிக்க போறேன்.  சொல்றதை எதுவும் செய்றது இல்லை. இவளுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா எந்த தப்பும் செய்யாமல் கொலை பழியை நாமத்தானே சுமக்கனும்.  அன்டிடோஸ் கண்டுபிடிக்க சொல்லியிருக்கேன்.  அவங்களும் முயற்சி பண்ணிட்டுத்தான் இருக்காங்க.  ஆனால் அதை கண்டுபிடிப்பதிலும், தேடுவதிலும்தான் பிரச்சனை.  மாற்று மருந்தை கண்டுபிடிக்க நாள் எடுக்குமாம்.  சரி இதை பயன்படுத்துபர்களின் லிஸ்டை எடுத்து அவர்களின் கேட்கலாம் என்று பார்த்தால், எதற்காக இதை தேடுகிறோம் என்று நம்மை ஈஸியா ஸ்மெல் பண்ணிடுவாங்க.  இவளுக்காக எல்லாம் அப்படி போய் மாட்டி முடியாது.  இருக்குற வரை இருக்கட்டும், அப்புறம் அவ விதி போல நடக்கட்டும்.  ஆனால் அது இங்கே நடக்க கூடாது.  இந்த முறை இந்தியா போகும் போது அவளையும் கூட்டிட்டு போயிடு.  ட்ரைனிலோ, பஸ்சிலோ வீடு போய் சேர சொல்லு.  அன்னைக்கு சோபாவில் கண்ணை மூடிட்டு இருந்தா.  தூங்கத்தான் செய்யுறா என்று நினைத்து எழுப்பினா அப்படி தலை சரிஞ்சு விழுது.  எப்போ மயங்கி தொலைஞ்சாளோ.  அப்புறம் அவ மயக்கத்தை தெளிய வைக்க போதும் போதுன்னு ஆயிடிச்சு. நமக்கு ஏண்டா இந்த வீண் வேலை." என்று ஆனந்த் பொறுப்பை துறந்தவனாக கூற அவனுக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை அயன்.

ஜீவன் உருகி நின்றேன் Tempat cerita menjadi hidup. Temukan sekarang