காந்தவிழிகள்....👀*

14 0 0
                                    

   EPI : 11

  
       "என்னடி phone இங்க வெட்சிட்டு ரூம்குள்ள இருந்த நீ........" மிஹியை பார்த்துக் கேட்க்க அவளோ அதை காதில் வாங்காமல் சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.

மீனாட்ச்சி : உன்ன தான்டி கேட்க்குறேன்...

மிஹி : சும்மா இரும்மா நொய் நொய்னு கத்திட்டு இருக்குற...

மீனாட்ச்சி : இப்போ என்னடி கேட்டுடேன்னு கத்துற.....

மிஹி : அய்யோ அங்க அவன் தொல்ல இங்க இவ தொல்ல 😣கடவுளே.... 

மீனாட்ச்சி : அவனா யாருடி அது.....

மிஹி : உன் தொல்ல வேற போமா எனக்கு சாப்பாடே தேவல்ல

    தட்டில் கையை கழுகியவள் மீண்டும் அறைக்குச் சென்றாள்

மீனாட்ச்சி : ஏதோ சாப்பாட்டுல கைய கழுவிட்டு போறன்னுற நெனப்பு😏 பத்து தோசைய மெண்டுட்டு பட்டினியா போறாளாம் மகாராணி

     மிஹியோ மீனாட்ச்சி கத்துவதை கூட காதில் வாங்காமல் சென்றாள்...

   ✫✫✫✫✫✫✫✫✫✫

   "டேய் எப்போடா விடியும் ....." தன் காலை பிரபா மீது போட்டவன் அவனை அணைத்துக் கொண்டான் ஸ்ரீ

  ஸ்ரீ : டேய் தம்பி தூங்கிட்டயா.......

பிரபா :😴

ஸ்ரீ : தம்பி பிரபா.....தம்பி

பிரபா : ஹூம்....

ஸ்ரீ : எப்போடா விடியும்

பிரபா : ஹூம்

     பிரபாவோ தூக்கத்தில் ஹூம் போட்டவனை ஸ்ரீ அவன் பக்கம் திருப்ப அவனோ ஸ்ரீயை அணைத்துக் கொண்டு அவன் மேல் புரண்டு அமுலுனு அழைத்தபடி அவன் முகத்தை தடவ ஸ்ரீயோ அவன் கையை தட்டிவிட்டவன் அவன் அணைப்பில் இருந்து விலகி அவன் கையருகில் தலையணையை வைக்க அவனோ அதனை அணைத்துக் கொண்டு அதன் மேல் புரண்டான்......ஸ்ரீயோ அவன் நிலையைக் கண்டு தலையில் கை வைத்தான்.......

     ✫✫✫✫✫✫✫✫✫

    மிஹி கையில் தலையை தாங்கிக் கொண்டே பை(f)லை படித்துக் கொண்டு அப்படியே உறங்க..... இதைக் கண்ட ஸ்ரீயோ ஐஸ் வோடரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க.........

      "அம்மா மழ......."என்றவாறே கத்திக் கொண்டு எழுந்தாள் மிஹி ...... பக்கத்தில் சுற்றி ஸ்ரீயை தேடியவளிற்கு அப்போது தான் நினைவு வந்தது தான் கண்டது கனவென்று......

  மிஹி : 😣 என்னடா இது எனக்கு வந்த சோதன .....நிம்மதியா தூங்க கூடவா விட மாட்டான்....நிஜத்துல தான் இம்ச பன்னினான் இப்போ கனவுக்கும் வந்துடான் 😣😣அய்யோ இனி அங்கயும் என்ன தொல்ல பன்ன போறானா...... 😣இவனால நா இன்னம் என்ன என்ன அனுபவிக்கப்போறெனோ ...... நாராயணா இந்த சைகோட இருந்து காப்பாத்து......🙏🏻

       கையை எடுத்து கும்பிட்டவளோ மீண்டும் பெட்ஷீடை எடுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கினாள்.....

      ✫✫✫✫✫✫✫✫

     சூரியனோ தன் பொற்க்கதிர்களை பரப்ப...... அவரவர் வேலைகளிற்காக உலகத்தோர் கண்விழிக்க பறவைகளோ உணவிற்க்காக தன் பிரயாணத்தை ஆரம்பித்தது........ 🕊️

    மிஹி பை(f)லை எடுத்துக் கொண்டு தன் ஸ்கூட்டரில் ஓபிஸ்க்குச் செல்ல.......அருணாவோ அவளை பின் தொடர்ந்துச் சென்றவள் வேறு வழியால் ஓபிஸ்க்குச் சென்றாள்.....

       ✫✫✫✫✫✫✫✫✫✫✫

      இருபத்தி மூன்று வருடம்  கழித்து மீண்டும் சொந்த ஊரிற்கே வந்த தன் உடன்பிறப்பை பார்ப்பதற்க்காக மல்லிகா ஆர்வத்துடன் தயாராகிக் கொண்டு இருக்க லீனாவோ இனம்புரியாத சந்தோஷத்துடன் ரெடியாகிக் கொண்டு கண்ணாடி முன்னால் நின்றாள்.......

      அவளின் தொலைபேசிக்கு மெசேஜ் வரும் சத்தம் கேட்டவள் கட்டிலில் இருந்த தொலைபேசியை பார்த்து சிரித்துக் கொண்டே தன் விரி கூந்தலை வாரினாள்.......

     ✫✫✫✫✫✫✫

   தேவி ஓபிஸிற்க்கு லீவ் போடக் கூறியும் அதனையும் மீறி மிஹியை பார்க்க வேண்டியே தேவியின் பேச்சிற்க்கு கூட கவனிக்காதவன் வாசலில் நின்று கொண்டு இருந்த பிரபாவையும் ஒரு கையால் பிடித்து இழுத்துக் கொண்டுச் சென்றான்......

      செல்லும் இவர்களையே பார்த்துக் கொண்டு இருந்த தேவியோ.....காலை உணவை சமைக்க வேண்டி கிட்சனிற்க்குச் சென்றாள்.........

   ✫✫✫✫✫✫✫✫✫✫

𝑾𝒓𝒕𝒏 𝑩𝒀 : 𝑹𝒊𝒛𝒛𝒊 𝑨𝒂𝒔𝒉𝒖.....

   

காந்த விழிகள்Where stories live. Discover now