[17/05, 11:22 am] 𝐅𝐚𝐭𝐡𝐢𝐦𝐚 𝐑𝐢𝐳𝐧𝐢𝐲𝐚... (𝐑𝐢𝐜𝐡𝐮𝐀𝐚𝐬𝐡𝐮): காந்த விழிகள்
Epi : 48
"அண்ண எங்கன போனா இவ...." ஒருவன் கேட்க்க மற்றவனோ "எனக்கு எங்கடா தெரியும்.. இதுக்கு தான் சொன்னேன் குடிக்காத குடிக்காதனு...." அவனோ மற்றவனை பார்த்து திட்ட.... " நான் என்ன வேணும்னா பன்னேன் ... அவள்க்கு சாப்பிட கொடுக்க சொன்னீங்க அதனால தான் அவள் கயிற அவிழ்த்தேன்... அவ என்ன கட்டயால அடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டால் இதுல என் தப்பு என்ன இருக்கு...."
" டேய் இப்போ மூனு பேரும் சண்ட போடாம அவள தேடுற வழிய பாருங்க ...இவ கத்திய வீசினதால அவள்க்கு வேற காயமாகிடுச்சி செத்து கித்து பொய்ட்டாள்னா.. என்ன ஆகுறது.... முதல்ல அவள தேடுங்க...."
அவன் கூற "சரி எல்லாரும் ஒரே திசையில போகாம வேற வேறயா போங்க...." மற்றவன் கூற நால்வரும் நான்கு திசையில் சென்றனர்..." அக்கா எங்க அக்கா இருக்க......"நாதி காட்டில் கத்த " நாதி நீ இந்த பக்கமா போ .... " சின்ன கூற அவளும் தலையை அசைத்தவள் அந்த திசையில் செல்ல முற்பட அவளின் கையை பிடித்து இழுத்து இழுக்க ....
இதை எதிர்பாராத நாதியாவோ அவனின் மேல் மோதியவள் அவனை புரியாமல் பார்க்க அவனோ அவள் கையை பிடித்தவள் ... துப்பாக்கியை அவள் கையில் வைத்தான்...
அதை பார்த்தவள் அவனை பார்க்க " என்ன பார்க்குற .. அவன்கள் எத்தன பேர் இருக்காங்களோ தெரியல கைல வேற ஆயுதம் இருக்கும் நீ தனியா எப்டி போவ ... அதனால தான் துப்பாக்கிய தந்தேன்.... அவன்கள் உன்ன ஏதாவது பன்ன வந்த சுட்டுடு.... மிச்சத்த நான் பாத்துக்குறேன்....."
நாதியிடம் கூற அவளும் தலையசைத்தவள் செல்ல..." நாதி பீ கெயபுல்....." சின்னா கத்த மறுபடியும் திரும்பி பார்த்தவள் 👍🏻 கையால் செய்தவள் அங்கிருந்து செல்ல அதற்க்கு எதிர் திசையில் சின்னா சென்றான்....
அவன் கூறியது போலவே பொலிஸ் டீம் அந்த காட்டிற்க்குள் சென்று ஒவ்வொரு திசையிலும் தேடினர்....