🎭 *பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...* 🎭
நேசம் - 05
🤍••••••••••••••••••🖤
"நானும் இந்த பொறுக்கி பையனுக்கு 20 30 கால் பண்ணிட்டன்.
ஆனா தூக்குறான் இல்ல 😬😬😬
எங்க போய் தொலைஞ்சிட்டானோ தெரியல😠 எவ்வளவு கொழுப்பு இருந்தா என் போனை அட்டென்ட் பண்ணாம இருப்பான் 😠 குடிகாரன் பொறுக்கி🤬🤬"போனை கையில் வைத்துக் கொண்டு குறுக்கும் மறுக்கும் ஆக நடந்து கொண்டிருந்தேன்.
" ஹேய் ரித்து 🤗
காலையிலே போனும் கையுமா புலம்பிட்டே கடுப்பா நடந்து பழகுற ... என்ன ஆச்சு உனக்கு ஓகேவா? "
" ஐயோ அக்கா அதெல்லாம் எதுவும் இல்ல சும்மாதான் நடந்துட்டு இருந்தன். ஆமா என்ன இன்னைக்கு ரொம்ப பரபரப்பா இருக்கிற மாதிரி தெரியுது"
" அது சரி நல்லா ஆள் தான் நீ 😃 சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம சுத்திட்டு இருக்குற...
நம்ம வீட்ல இருந்து கொஞ்சம் தூரத்தில இருக்கிற ஃபாரஸ்ட் என்ட்ரன்ஸ்ல ஒரு பொண்ணோட டெட்போடி இருக்குதாம் அதனாலதான் இன்னைக்கு ஏரியாவே ரொம்ப பரபரப்பா இருக்குது.."
" எ... எ... து 😳😳😳 டெ.. டெ.. டெட்... பாடியா? "
"ம்ம் ஆமா நீ அதை விடு...
இன்னைக்கு அம்மாவும் அப்பாவும் சொந்தக்காரங்களை பார்க்க போறாங்களாம். எனக்கு ஆஃபீஸ்க்கு டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறன். நீ வீட்ல தனியா இருந்துப்ப தானே"
" எது தனியாவா? நானா? எனக்கு பயமா இருக்கு நான் உன் கூட ஆபீஸ் வரேன்"
" 🙄🙄 எது எங்கடா சின்ன குழந்தையா நீ? 😃 உன் பிரண்ட்ஸ் யார சரி வர சொல்லி இரு. இல்லன்னா நீ உன் பிரெண்ட்ஸ் வீட்ட கிளம்பி போ.
எனக்கு ரொம்ப லேட் ஆகுது நான் கிளம்புறன் பை பை
டைனிங் டேபிள்ல சாப்பாடு இருக்குது சாப்பிட்டு கிளீன் பண்ணிடு"
என் அக்கா அவசரம் அவசரமாக நகர பயத்தில் எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைக்க முயன்று தோற்ற நான் ஒரு முடிவோடு சாப்பிட்டுவிட்டு ரெடியாகி அவனைப் பார்க்க ஆனது ஆபீசுக்கு செல்ல வெளியில் வந்தேன்.
DU LIEST GERADE
🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭
RomantikDisclaimer: ஒரு ஜாலியான லவ் ஸ்டோரி ரொம்ப பெருசாலாம் எதிர்பாக்காதீங்க 🤗 வழக்கம் போலதான் கொஞ்சமா த்ரில்லர், க்ரைம், ஃபேண்டஸி, கருத்தூசி எல்லாம் மிக்ஸ் பண்ண டெம்லேட்... 🤩 பிடிக்காதவங்க ஸ்கிப் பண்ணிடுங்க.