நேசம் 25

3 0 0
                                    

🎭 *பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...* 🎭

*நேசம் - 25*


ஆய்வுக்கூடத்தில் விட்டு வெளியேறிய நான் சுதந்திர காற்றை சுவாசப் பைகளுக்குள்  நிறைத்து  கொள்கிறேன்.

சற்று நீண்டு வளர்ந்த கூந்தலை அள்ளி எடுத்து முடிந்து கொண்டு மண்டை ஓடு பிளந்த இடத்தில் யட்சிணியின் தோலை வைத்தே கட்டும் போட்டுக் கொண்டு சாவகாசமாக அந்தப் பனி குட்டி சாலையில் வரும் காலில் நடக்கிறேன்.

சட்டை இல்லாத யாக்கை தீண்டிய குளிர் காற்று ஊசியாய் குத்தி யாக்கை சிவக்க வைத்திட அனல் விழிகளால் தெறிக்கும் பாச பிணைப்புடன் நடக்கிறேன்.

தலை கனத்து நிலை தடுமாறுகிறது.
நெஞ்சை பிடித்துக் கொண்டே ஒரு மரத்தடியில் சோர்வாய் அமர்கிறேன்.

ஓய்வுக்காய் சிறிது நேரம் கண் அயர்கிறேன்.

மூடிய விழிகளுக்குள்ளே துர் கனவுகள் அலை மோதிட ஆசுவாசமாய் மூச்சு எடுத்துக் கொண்டே எழுந்து நிற்கிறேன்.

இரண்டு குடுவைகளையும் தூக்கிக் கொண்டு மீண்டும் நடக்கிறேன்.

மூக்கிலிருந்து வழிந்து இறங்கிய குருதி நெஞ்சை நனைத்து குழந்தையின் சோதனைக் குழாய்க்குள் விழுந்து செந்நிறமாய் மாற்றுகிறது.

உணர்வுகள் எதுவும் இல்லாமல் நடந்தே வீட்டை அடைகிறேன்.

வீட்டுக்குள் சென்று திறக்கப்படாமல் இருந்த அறைக்குள் இரண்டு பெட்டிகளையும் வைத்து விட்டு வெளியேறி எனது அறைக்குள் நுழைகிறேன்.

" குப் " என்று புளிச்ச இரத்த வாடை முகத்தில் மோதுகிறது.

முகத்தை சுழித்துக்கொண்டே செத்துக்கிடந்த பூனையை சுத்தம் செய்துவிட்டு நானும் குளித்து உடைமாற்றி எனது மெத்தையில் சுகமாக விழுகிறேன்.

அறைக்குள் ஏதோ புதிய வாசம் ஒன்று வீசுகிறது அந்த வாசத்தின் மென்மையில் கண்ணயருக்கிறேன்.

பக்கத்து அறையில் வைத்திருந்த குழந்தையின் குடுவையிலிருந்து எழுந்த இரத்த வாடையை மோப்பம் பிடித்துக் கொண்டே அதே அறையில் ஒரு சவப்பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த உருவம் கண் முழித்து நெருங்கி வருகிறது.

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭    Onde histórias criam vida. Descubra agora