நேசம் 20

2 0 0
                                    

🎭 *பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...* 🎭

*நேசம் - 20*

"யாது...."  கூவலுடன் ஓடி வந்து என்னை அணைத்துக் கொள்கிறாள் என்னவள்.

அவளை அடிக்க ஓங்கிய கைகள் அந்தரத்தில் மிதந்தன.

என் இறுகிய வதனத்தில் நரம்புகள் புடைக்க அவளின் தாயை முறைத்துக் கொண்டு நின்றேன்.

நித்து அதிர்ச்சியாகவும்
கயல் ஒன்றும் புரியாமலும்
நவீன் உறைந்து போயும் நின்று இருக்க
புதிதாக வந்தவனோ குழப்பப் பார்வையோடு  பார்த்துக் நித்துவை கொண்டு நின்றான் ...

நித்துவை பெண் பார்க்க வருவதாக கூறிய அவர்கள் வீட்டிற்குள் நுழைய நானும் என் அவளை அணைத்த படியே வெளியேறுகிறேன் யாருக்கும் பதில் அளிக்காமல் ...

என் பின்னால் நவீனும் ஓடி வந்தான்.

அங்கே வீட்டுக்குள்ளே ரித்துவின் தந்தை நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர அதில் பதறிய ஏனையவர்கள் பதறிக்கொண்டு நிற்க நவீனை ஒரு பார்வையை பார்க்கிறேன்

புரிந்துகொண்ட அவனும் உள்ளே செல்கிறான்.

எனக்காக வெளியில் காத்துக் கொண்டிருந்த கமிஷனர் "நோவா"வை நெருங்குகின்றேன்.

நான் : எனக்கு உன்னோட கார் வேணும் இப்பவே

நோவா : அது எனக்கு மட்டுமில்ல உனக்கும் சொந்தமானது தான் அதுக்கு முதல் இங்க என்ன நடக்குதுன்னு எக்ஸ்பிளைன் பண்ணு

நான் : டைம் இல்ல நீ ஏன் உள்ள போய் தெரிஞ்சுக்கோ...

அவன் பதிலுக்கு எதிர்பாராமல் என்னவளை அமர வைத்து வண்டியை கிளப்புகிறேன்.

🌙❤️🌙❤️🌙❤️🌙❤️🌙❤️

நான் நோவா என்னைப் பற்றி கூறுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை ஒரு காலத்தில் அவனுக்கு நண்பனாக இருந்தேன்.

அவன் மேல் கொண்ட பொறாமையால் அவனுக்கு துரோகியாக மாறிவிட்டேன்.

ஆனாலும் அவன் மீது சற்று பாசம் இருக்கத்தான் செய்கிறது பாழ்பட்ட மனதில் ...

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭    Donde viven las historias. Descúbrelo ahora