🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭
நேசம் - 01
✨ ✨ ✨
ஆள் இல்லாத சாலை...
நடுநிசி பொழுது...நானும் அவளும் இறுக்கமாக கைகளை கோர்த்துக் கொண்டு நடக்கிறோம்.
இரா பட்சிகளின் கதறல் அடி மனதில் கிலி பரப்ப குளிர்ந்த காத்து மேனியை ஊசியாய் துளைத்து கடந்திட உஷ்னமான மூச்சுக்காற்றுகளின் கதகதப்பில் மௌனமாய் நகர்கிறோம்.
திடீரென ஒரு அலறல் சத்தம்.
திடுக்கிட்ட என்னவள் பயத்தில் என்னை அணைத்துக் கொண்டாள்.
மென்மையாக தளிரவளை அணைத்து தலைகோதி சமாதானம் செய்கிறேன்.
நான் : ரித்து பயப்படாத. நான் இருக்கிறன்ல. ஒன்னும் ஆகாது...
ரித்து : ஆமா நீங்க இருக்குறப்போ எனக்கு என்ன பயம் 🤗 ஆனாலும் பயமா இருக்கு இந்த மிட் நைட் வெளில வர வேணாம்னு சொன்னன் கேட்டீங்களா?
நான் : 😁😁 நான் என்னம்மா பண்றது நாம பகல்ல மீட் பண்ண ஏலாது. வீட்ட மாட்டினா ரெண்டு பேருக்கும் சங்கு தான்.
உங்கள வெளியில் கூட்டிட்டு போகணும்னு ஆசைப்பட்டது தப்பா😒
ரித்து : உடனே மூஞ்ச அப்படி வச்சுக்காத😄 என் அழகு பையன் டா நீ மூஞ்ச அப்படி வெச்சா நல்லாவே இல்ல 😉 நீ கூப்பிட்டன்னு தானே இந்த மிட் நைட்ல கூட சுவரேறி குதிச்சி வெளியில வந்தேன்.
நான் : ஹி ஹி ஹி 😁 எனக்கு தெரியும். சரி வா அந்த பக்கம் போய் என்ன சத்தம் உன்ன பாக்கலாம்.
ரித்து : எது 🤨🤨 சத்தம் வந்த பக்கம் போய் பார்க்க போறியா🙄
யோவ் லூசா நீ?நடுக்காட்டுக்குள்ள போயிட்டு என்ன பண்ண போற. அது ஏதாச்சும் அனிமல்ஸ் சவுன்டா இருக்கும். நீ ஒரு இடத்தையும் போக வேணாம்.
என செல்லமாக என் நெஞ்சில் குத்திய படி கூறிக் கொண்டிருக்கும் போது மீண்டும் ஒரு அலறல் சத்தம் கேட்டது.
இந்த முறை அந்த அலறல் சத்தம் மிக அருகிலும் தெளிவாகவும் கேட்டது.
ஆம் அதே தான்... நான் நினைத்தது போல் அதனுடைய சத்தம் தான்.
வெளியில் தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டே என்னை அணைத்துக் கொண்டிருந்த என்னவளை முதுகில் தட்டி ஆசுவாசப்படுத்திய நான் அவளை சத்தம் செய்யாமல் இருக்குமாறு உதட்டில் விரல் வைத்து காட்டிக் கொண்டே சுற்றிலும் முற்றிலும் பார்வையை சிதறவிட்டேன்.
அதன் மூச்சுக்காற்றை என்னால் உணர முடிகிறது. பெரும் சுழல் காற்று போல் வேகமாக வீசிய அதன் அனல் மூச்சில் தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்திருந்த என் வியர்வை சுரப்பிகள் இயங்கத் தொடங்கின.
இந்த இடத்தில் இருப்பது ஆபத்து என்பதை எனது மூளை உரக்க கூறினாலும் இன்று நானா அதுவா என்று ஒரு கை பார்த்து விடும் எண்ணமும் என் மனதில் தோன்றாமலில்லை.
ஆனாலும் என்னவள் நடுக்கத்தை உணர்ந்தவனாக அவளை அணைத்துக் கொண்டே வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
ரித்து : அது என்ன ஏனோ பொண்ணு சத்தம் போல இருக்கு
நான் : அதுலாம் உன் மன ப்ராந்தி 😄
ரித்து : டேய் எரும...
நான் : சொல்லு கன்னுக்குட்டி
ரித்து : பொறுக்கி... பொறுக்கி.. நா சீரியஸா கதச்சிட்டு இருக்கன் நீ ஜோக் பண்ற 😬
நான் : 😄😄 வீடு வந்துட்டு உள்ள போ... லேட் ஆச்சு
ரித்து : 😒😒
நான் : ஏன் மூஞ்சு அப்டி போகுது பேப் 🙄
ரித்து : அவ்ளோதானா...😒 நீ போக போறியா ?
நான் : பேகனுமா...? உன் கூடவே இருக்கனும் போல இருக்கு
ரித்து : அப்போ நீயும் வா.. மார்னிங் வீட்ல எல்லாரும் எந்திரிக்க முதல் கிளம்பி போய்டு...
நான் : இது நல்லா இருக்கே 😉
ரித்து : கேடி... வாடா வென்ன மவனே
நான் : வாய் கூடிட்டுடி தேனுமிட்டாய்... 🤨 சரி நீ முத உள்ள போ நான் பைக்க பின்னாடி அந்த சந்துல பார்க் பண்ணிட்டு அஞ்சே நிமிசத்துல வந்துடுறன் 😘
To be continu... ✨
By : f.Nick_
![](https://img.wattpad.com/cover/368915199-288-k995356.jpg)
ŞİMDİ OKUDUĞUN
🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭
RomantizmDisclaimer: ஒரு ஜாலியான லவ் ஸ்டோரி ரொம்ப பெருசாலாம் எதிர்பாக்காதீங்க 🤗 வழக்கம் போலதான் கொஞ்சமா த்ரில்லர், க்ரைம், ஃபேண்டஸி, கருத்தூசி எல்லாம் மிக்ஸ் பண்ண டெம்லேட்... 🤩 பிடிக்காதவங்க ஸ்கிப் பண்ணிடுங்க.