🎭 *பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...* 🎭
*நேசம் - 23*
⚠️⚠️⚠️
Disclaimer :-மெல்லிய மனம் படைத்தவர்கள்
இந்த எபிசோடை படிக்க வேண்டாம் படித்துவிட்டு என்னை குற்றம் குறைகள் சொல்லக்கூடாது.ரத்தம் தெறிக்கும் சில காட்சிகள் மற்றும் சில வேளை அருவருக்கத்தக்க காட்சிகள் இருப்பதால் இந்த அத்தியாயத்தை பயந்த சுபாவம் உடைய அன்பர்கள் தயவு செய்து தவிர்ந்து கொள்ளவும்.
முக்கியமாக சாப்பிடும் முன் வாசிப்பதை தவிர்ந்து கொள்ளவும்.
இவ்வளவு கூறியும் படித்துவிட்டு என்னை Ib இல் கல் கொண்டு தாக்கவே கூடாது.
🚨🚨🚨
பயத்தில் வியர்த்து முகத்தில் இரத்தப் பசை வெளுத்து போய் கண்ணாடியோடு முட்டி நின்றவளை இன்னும் நெருங்கி அவள் கழுத்தை நெரித்து விழிகள் பிதுங்குவதை குரூரமாக பார்த்து ரசிக்கிறேன் ....
அவள் மூக்கிலிருந்து கொடி போல அரைத்தன்ம திரவம் ஒன்று வழிந்து என் கைகளை பின்னிக் கொள்கிறது..
அந்தக் கொடியை பிடித்து இழுக்கிறேன் என் கைகளில் சுற்றிக்கொண்டே
ரத்தமும் சகதியுமாய் முற்று முழுதாக வெளியில் இழுத்துப் போடுகிறேன் அந்த கொழுத்துப் போன ஒட்டுண்ணியை ...
நான் நினைத்தது சரிதான் இது அந்த மூளையை தின்னும் ஒட்டுண்ணி வகையறாவை சேர்ந்த ஒரு குப்பை தான் ...
வெளியில் வந்து விழுந்தது ஒரு மூளையின் வடிவத்திலேயே உருமாறி நிலத்தில் தத்தி தத்தி நகர்கிறது..
கொலை வெறியோடு அதை முறைத்துக் கொண்டே மூளை இல்லாமல் விழப்போன வெற்றுடலை என் தோளில் போட்டுக் கொண்டே அந்த ஒட்டுண்ணி மூளையை மெதுவாக தொடர்கிறேன்...
அதைத் தொடர்ந்து ஒரு குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைகிறேன்.
![](https://img.wattpad.com/cover/368915199-288-k995356.jpg)
YOU ARE READING
🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭
RomanceDisclaimer: ஒரு ஜாலியான லவ் ஸ்டோரி ரொம்ப பெருசாலாம் எதிர்பாக்காதீங்க 🤗 வழக்கம் போலதான் கொஞ்சமா த்ரில்லர், க்ரைம், ஃபேண்டஸி, கருத்தூசி எல்லாம் மிக்ஸ் பண்ண டெம்லேட்... 🤩 பிடிக்காதவங்க ஸ்கிப் பண்ணிடுங்க.