நேசம் - 08

2 0 0
                                    

🎭 *பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...* 🎭

*நேசம் - 08*



காதல் வந்து விட்டால் எப்படிப்பட்ட மனிதனையும் மாற்றிவிடும் என்பது உண்மைதான் போலும்.

உணர்வுகள் என்றால் என்ன என்ற அறியாத நானே அவளின் காதலுக்கு அடிமையாகி விட்டேன்.

இவள்அருகில் இருந்தால் வேறு எதுவும் எனக்கு தேவையில்லை.

இவள் கன்னக்குழி சிரிப்பில் வீழ்ந்து
படபடக்கும் விழியாழத்தில் மூழ்கி
துரு துரு மழலை மொழியில் மொத்தமாய் விழுந்து விட்டேன்.

என் கடமைகளை மறந்து விட்டேன்.
என்னவளோடு இருக்கும் ஒவ்வொரு நொடியைம் ரசிக்கிறேன்.

இவளின் இறுதி மூச்சு வரை நான் இருப்பேனா என தெரியாது. ஆனால் என் இறுதி மூச்சு வரை எனக்காக இருக்கும் இவளை காணும் போதெல்லாம் இனம் புரியாத சந்தோஷத்தில் மிதக்கிறேன்.

நவீனை எது எதுவோ சொல்லி ஒரு வழியாக அனுப்பிவிட்டு தாயைப் பிரிந்திருந்த சேயின் களிப்புடன் அவளை நெருங்கி அமர்ந்தேன்.

தீயாய் முறைத்தவள் என்னோடு பேசாமல் கண்களை  மூடி கொண்டாள்.

நானும் பாவமாக முக பாவங்களை மாற்றிக் கொண்டு எனது காயங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டுடலைப் போர்த்தி இருந்த டி-ஷர்டை கழற்றி வீசிவிட்டு அவள் கன்னங்கள் பற்றி என் பக்கம் திருப்பினேன்.

என் காயங்களை கண்டவள் கண்கள் அவள் அனுமதி இன்றி கலங்கி கண்ணீர் கண்ணம் நனைத்தது.

அவள் கண்களையே ஆழமாக பார்த்த நான் அவளை நெருங்கி என் இதழ்களால் கண்ணீரை துடைத்து சுவைத்து நெற்றி முட்டி அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்தேன்.

அவள் இடையை சுற்றி அணைத்துக் கொண்டு வயிற்றில் முகம் புதைத்து அவன் மடியில் தலை சாய்த்து கண் மூடினேன்.

என் தலையை கோதி விட்டவள் எதுவும் கேட்காமல் எனது காயங்கள் இருந்த இடத்தில் மெல் விரல்களால் இதமாக வருடிவிட்டாள்.

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭    Opowieści tętniące życiem. Odkryj je teraz