நேசம் 03

3 0 0
                                    

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...🎭

நேசம் - 03



ஆன்மாவை உறையவைக்கும் மெல்லிய குளிர் காற்று என்னவளின் இதமான அணைப்பில் கட்டுண்டு கிடக்கிறேன்.

எத்தனையோ இரவுகள் கண்ணீரில் நனைந்து போயிருக்கும் கோரமான தனிமையில்.

தினம் தினம் போராட்டம்... வெறியாட்டம்...
இரத்த வேட்கை கொண்டு அலையும் அவையிடம் இருந்து தப்பிக்க..

நினைத்துக் கூட பார்த்ததில்லை இந்த நிம்மதியான அரவனைப்பை.

கொடூரன் எனக்குள்ளும் ஈரம் உண்டென தினம் தினம் உணர்த்தி விடுகிறாள்.

வரமா இவள் சாபமெனக்கு...

அவள் கரு விழிகளின் சுழலில் சிக்கி அமிழ்ந்து போகிறேன் மறுப்பின்றி.

காதலை துச்சமாய் பார்த்தவன் இன்று அவள் வாசமே கதியென கிடக்கிறேன்.

அவள் கன்னங்கள் பற்றி என் விழிகளோடு அவள் விழிகளை கலக்க விடுகிறேன் மையலுடன்.

நாணிச் சிவந்தவளோ எந்தன் நெஞ்சத்தை மஞ்சமாமாக்கி விழிமூடி இதயத்துடிப்பின் தாலாட்டு இசையில் துயில் கொள்கிறாள்.

அவளழகை ஆராதித்தவனாய் நானும் முழங்கை மடக்கியதில் தலை சாய்த்து மறு கையால் அவள் குழல் கோதிவிடுகிறேன்.

🎭   🎭   🎭

கதிரவன் முதல் ஒளி என் முகத்தில் மோதிட மெதுவாக விழி திறக்கிறேன்.

என் வெற்று மார்பில் ஈரக்கை பதித்து அழகாய் புன்னைக்கும் என்னவளின் அழகு வதனத்தில் தூக்கம் முழுவதும் தொலைந்தவனாய் அவள் அவள் கரங்களை இழுத்து மார்போடு இறுக அணைத்துக் கொள்கிறேன்.

அவள் அப்பாது தான் குளித்து முடித்து விட்டு வந்திருப்பாள் போலும். அவள் மேனியிலிருந்த நீர்த்திவலைகள் என் மார்பை நனைக்க அதன் குளிர்ச்சியின் குறுகுறுப்பில் எழுந்து அமர்கிறேன்.

என் மடியில் வாகாக அமர்ந்தவள் என் கழுத்தை கட்டிக்கொண்டு இதழ்கள் உரசி நெற்றி முட்டி கள்ளச் சிரிப்போடு விலக நானும் புன் சிரிப்போடு அவளிடை இறுக்கி வன்மையாக இதழ் கொய்ய நடுவில் ஒற்றை விரல் வைத்து

" டேய் கேடி காலைலே ஆரம்பிக்காத வீட்ல எல்லாரும் எழும்பிட்டாங்க நீ கிளம்பு முதல் "
என்ன கிண்டலாக கூறி எனை குளியலறை பக்கம் தள்ளிவிட்டால்.

நானும் சிரித்துக் கொண்டே கட்டிலில் ஒரு முறை புரண்டு எழுந்து முகம் கழுவி  வந்தேன்.

ஈரம் சொட்ட சொட்ட தலையை சிலிர்ப்பிக் கொண்டே வந்த என்னை தின்று விடுவது போல பார்த்த அவள் மனமே இல்லாமல் பல்கனி கதவை திறந்து விட்டு என் முகத்தை அவளது துப்பட்டாவால் துடைத்து விட்டாள் .

அவளை இறுதியாக ஒரு முறை கட்டி அணைத்து நெற்றியில் ஆழமாக அழுத்தமாக முத்தமிட்டு விட்டு இரவு எந்த வழியாக வந்தேனே அதே வழியில்  இறங்கி அவளுக்கு tata கட்டிவிட்டு எனது பைக் இருந்த இடத்திற்கு நடந்தே வந்து சேர்ந்தேன்.

நான்; அவள் என் கண்களை விட்டு மறையும் வரை காதல் கசிய பார்த்துக் கொண்டே வந்து அவள் என் கண்களை விட்டு மறைந்ததும் குரூரமான ஒரு புன்னகை முகத்தில் தோன்றியது.

அங்கே என் வரவுக்காகவே ஒருவன் உச்சகட்ட சினத்துடன் நின்று கொண்டிருந்தான்.

நான் அவனை கவனித்தும் கவனிக்காதது போலவே என் பல்சரை அதிவேகத்தில் விரட்டினேன்.
✒️_

To be continu... ✨

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭    Tempat cerita menjadi hidup. Temukan sekarang