நேசம் 18

2 0 0
                                    

🎭 *பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...* 🎭

*நேசம் - 18*

விழிகள் பெரிதாகி பார்வை கூர்மை அடைய சொட்டிய ரத்தத்தின் சுவையில் மதி மயங்கி நின்ற என்னை நெருங்கியது அந்த கழுதைப்புலி

நானும் அதை மூர்க்கமாக பார்த்துக் கொண்டே கழுத்தில் சொடக்கு எடுத்துக்கொண்டு அதை எதிர்கொள்ள தயாராகின்றேன்

என்னை பலவீனமானவன் என்று நினைத்து விட்டது போல

பாவம் அதற்கு தெரியவில்லை என் பலம்

அது வந்த வேகத்திற்கு என்மார் முட்டி என்னை கீழே தள்ளியது.

அதன் கழுத்தை உடும்புப்படியாக பிடித்துக் கொண்டேன். அதன் முழு உடலை சுற்றி எனது கால்களால் பிடித்துக் கொண்டு அதன் கழுத்தை ஒரே திருகில் முறித்தேன்.

"கடாக்க்..."

"ஹங்ங்ங்ங்ங்ங்...."
ஈன ஸ்வரத்துடன் அதன் ஆவி பிரிய அதன் பாவப்பட்ட சூடான குருதி என் மேனி நனைக்கிறது.

குளிருக்கு இதமாக அதன் குருதி என் மேல் போர்வையாய் ...

உடலில் உள்ள மொத்த வலுவும் வடிய பனித்தரையிலே மல்லாக்காக படுத்துக் கொள்கிறேன்.

என்னவளின் காதல் ததும்பும் அழகு முகம் என் உள்ளத்தை நிறைத்து என் மூச்சை சீராக்குகிறது.


💖💖💗💗💗💖💖💗💗💗💖💖



எவ்வளவு நேரம் இப்படியே படுத்து கிடந்தேன் என்று தெரியவில்லை. குளிரில் விறைத்துக் கிடந்த என் உடலில் யாரோ தீ மூட்டுகிறார்கள்

கடினப்பட்டு விழி திறக்கிறேன்

யாரோ எதுவோ என்னை தலைகீழாக ஒரு மரத்தில் தொங்கவிட்டு கீழே தீமூட்டியுள்ளது...

தீயின் கோர நாக்குகள் என்னை முழுங்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வெப்பம் தாளாமல் பனியில் உறைந்து கிடந்த என் உடல் கொதிக்கிறது.

கழுத்தை மட்டும் திருப்பி பார்க்கிறேன் மனிதனுக்கும் வெளவாலுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்று எனையே நோட்டமிட்டுக்கொண்டிருக்கிறது.

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭    Tahanan ng mga kuwento. Tumuklas ngayon