நேசம் - 12

2 0 0
                                    

🎭 *பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...* 🎭

*நேசம் - 12*








நடுநிசிப்பொழுது...

வித்தியாசமான ராட்சத ஆந்தைகளின்  அலறலும் சிறிய விலங்குகளின் கதறலும் கொடூரமாக எதிரொலிக்க சுடுகாட்டின் பிணவாடை மூக்கைத் துளைக்க....

பனிக்காலத்தில் ஆரம்பமாய் கொட்டத் துவங்கிய வெண் பனியில் நவீனின் பைக்கில் நானும் என்னவளும் ஊரை நோக்கி செல்கிறோம். இன்னும் சிறிது தூரம் தான்.

அதோ இந்தப் பாதையின் முடிவில் சற்று சரிவாக ஒரு பாலம் தெரிகிறது.

அதுதான் இரண்டு உலகத்திற்குமான வாயில் அதை தாண்டினால் பூமிக்குச் சென்று விடலாம்.

இதுவே நான் தனியாக இந்த வழியாக வந்திருந்தால்...


இந்த இயற்கையை நின்று நிதானமாக ரசித்து சுவைத்து இப்படியே முழுங்கிக் கொண்டு வந்திருப்பேன். 

இன்றோ என்னவள் பயத்தினால் என்னை இறுக்கமாக பிடித்து கொண்டிருக்கிறாள். அதனால் சற்று வேகமாகவே அந்த இடத்தை கடந்து உலகத்துக்குள் நுழைகிறேன்.

உச்சம் தொட்ட ஆதவனின் வெள்ளொளிக் கதிர்கள்  கண்களை கூசச் செய்தன.

பரவிய வெயில் எங்கள் மீது படிந்திருந்த பனித்துளிகளை கரைத்து எங்கள் வியர்வையை சுரக்க வைத்தன.

அமைதியான குளிர்ச்சியான அந்த உலகத்தில் இருந்து இந்த பரபரப்பான புகை சூழ்ந்த வெப்ப உலகத்திற்குள் நுழைய ஏதோ ஒரு ஒவ்வாமை எனக்குள்.

வண்டியை ஆள் ஆரவாரம் இல்லாத தார் சாலை ஓரம் நிறுத்தி கீழ் இறங்குகிறன்.

எனக்குள் தோன்றிய அதே ஒவ்வாமை அவளுக்குள் தோன்றியிருக்க வேண்டும் போலும் இறங்கி மூச்சுகளை இழுத்து விட்டவள் என் நெற்றியில் வழிந்த வியர்வையை அவள் விரல்களால் துடைத்து விட்டாள்.

மெலிதாக சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்த நான் அவள் முடியை காதோரம் ஒதுக்கி விட்டேன்.

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭    Tempat cerita menjadi hidup. Temukan sekarang