🎭 *பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...* 🎭
*நேசம் - 09*
சில்லென்ற காற்று முகத்தில் மோத கண் மூடி காற்றின் வாசத்தை மூச்சின் வழியே சுவைக்கிறேன்.
என்னதான் அமானுஷ்யங்கள் நிறைந்த இடத்தில் வீட்டை கட்டி இருந்தாலும் காம்பவுண்ட் சுகருக்குள் வீட்டை தாண்டி நிறைய செடி கொடிகளை வளர்த்திருந்தேன்.
புத்தரை மத்தியில் அமைக்கப்பட்டு இருந்த கல் இருக்கையில் நான் அமர்ந்திருக்க என் மடியில் என்னவள் அமைந்திருந்தாள்.
இப்போது நேரம் நான்கு மணி ஆகின்றது.
காலையில் என்னை தேடி பதற்றமாக வந்தவள்.... வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூறியவள்... நகர மனம் இன்றி என்னை இறுக அணைத்துக் கொண்டிருக்கிறாள். அவளை விட மனம் இன்றி நானும் அவள் அணைப்பில் கட்டுண்டு கிடக்கிறேன்.
உங்களுக்கு நான் ஒரு விடயம் கூற மறந்து விட்டேன் நான் நீங்கள் நினைப்பது போல ஒரு மனித பிறவியே அல்ல.
நான் இருக்கும் வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி உள்ளது.
சாதாரண நேரத்தை காட்டிலும் இங்கு மிக வேகமாக நேரம் நகரும்.
குறுகிய பகல்களையும் நீண்ட இரவையும் கொண்டது.
என்னவள் வந்தது காலையில் என்றாலும் எனது வீட்டில் அவள் நடுநேரமாக இருக்கிறாள். ஆனால் வெளியில் குறைந்த அளவு நேரமே சென்றிருக்கும்.
அதனால் தான் அவளை விட்டு சென்ற நவீன் இன்னும் திரும்பி இருக்கவில்லை. அவளும் அதைப்பற்றி சிந்தித்ததாக தெரியவில்லை.
என்னோடு இருக்கும் ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கிறாள்.
நாங்கள் எத்தனை நாட்களுக்கு இப்படி காதல் செய்வோம் என்று தெரியாது.
நானும் எதுவும் கூறாமல் அவள் ஆசைகளை நிறைவு செய்து கொண்டிருக்கிறேன்.
அவளைப் பார்த்துக் கொண்டே பாடுகிறேன்.
ஆஆ … உம் ஹே
தில்லு முல்லு பண்ணல
கெத்து கித்து காட்டல
சீனு கீனு போடல பல்பு
கில்பு வாங்கல
YOU ARE READING
🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭
RomanceDisclaimer: ஒரு ஜாலியான லவ் ஸ்டோரி ரொம்ப பெருசாலாம் எதிர்பாக்காதீங்க 🤗 வழக்கம் போலதான் கொஞ்சமா த்ரில்லர், க்ரைம், ஃபேண்டஸி, கருத்தூசி எல்லாம் மிக்ஸ் பண்ண டெம்லேட்... 🤩 பிடிக்காதவங்க ஸ்கிப் பண்ணிடுங்க.