🎭 *பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...* 🎭
*நேசம் - 15*
வழக்கமாக ஆரவாரமே இல்லாமல் அமைதியாக கிடக்கும் வனப்பகுதி அது இன்று பரபரப்பாக இருந்தது.
இந்த திடீர் பரபரப்புக்கு முக்கிய காரணம்.ரத்தப் பசையற்ற பிண்டம் தான்.
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு நானும் நவீனும் மீடியா வாகனங்களை தாண்டி நகர்ந்து சென்றோம்.
எங்கு என்ன நடந்தாலும் வேடிக்கை பார்க்கவும் போட்டோ பிடித்து ரீல்ஸ் போடவும் ஒரு கூட்டம் கிளம்பி விடும். அப்படியாக கிளம்பிய கூட்டங்களை அடித்து விரட்டிக் கொண்டிருந்தது காவல்துறை.
மஞ்சள் நிற கிரைம் ஸ்பாட் தடுப்புக் கீலங்களை தாண்டி பிணம் கிடந்த இடத்துக்கு சென்றேன்.
பிணத்தை அப்புறப்படுத்தி விட்டு பிணம் கிடந்த இடத்தை மட்டும் மார்க் செய்து வைத்திருந்தனர்.
பாரன்சிக் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்த போட்டோகிராபர் ஒருவர் வளைத்து வளைத்து அந்த இடங்களை புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
நான் அமைதியாக அத்தனை இடங்களையும் கண்களால் ஸ்கேன் செய்தபடி நவீனை அழைத்துக் கொண்டு காட்டிக்குள் சென்றேன்.
இங்கேயும் ஒரு இடத்தில் கருகிப்போன ஒரு பிரதேசத்தை சுற்றி சீல் செய்திருந்தார்கள்.
அதுதான் நான் கழுத்தை திருகிகொலை செய்தேனே அதே இடம் தான்.
அப்போது அங்கே வந்த ஒரு போலீஸ் அதிகாரி பவ்யத்துடன்
" சார் இப்பதான் கமிஷனர் கால் பண்ணாரு நீங்க இந்த கேஸ் எடுத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க எல்லாமே அப்புறம் எதுக்கு இங்க வந்து இருக்கீங்க" ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக பயத்துடன் கேட்டார்.
நான் வழக்கம்போல் எதுவும் பேசாமல் அமைதியான பார்வையை அவரது பக்கம் வீசிவிட்டு எரிந்து போய் கிடந்த அந்த இடத்தை விரல் நீட்டி சுட்டிக்காட்டி
CZYTASZ
🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭
RomansDisclaimer: ஒரு ஜாலியான லவ் ஸ்டோரி ரொம்ப பெருசாலாம் எதிர்பாக்காதீங்க 🤗 வழக்கம் போலதான் கொஞ்சமா த்ரில்லர், க்ரைம், ஃபேண்டஸி, கருத்தூசி எல்லாம் மிக்ஸ் பண்ண டெம்லேட்... 🤩 பிடிக்காதவங்க ஸ்கிப் பண்ணிடுங்க.