நேசம் 02

10 0 0
                                    

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭

*நேசம் - 02*


கருமை போர்வை போர்த்தியிருந்த பசுமையான காட்டுக்குள் விரைந்தன என் கால்கள்.

ஒவ்வொரு அடி அடித்து வைக்கும் போதும் சருகுகளின் சலசல சத்தம் நான் போகும் திசையை உணர்த்திக் கொண்டிருக்க...

எது நடக்கக் கூடாது என நினைத்தேனோ அது நடந்து விட்டிருந்தது.

ஆம், அந்த சத்தம் என்னவள் கூறியது போல ஒரு பெண்ணின் கதறல் தான்.

உயிர் போகும் வலியில் அந்த எமனையே நேரில் கண்ட அந்தப் பெண்ணின் அலறல் தான்.

நான் கடமை தவறி விட்டேனா?🙄🤔

இல்லை எனக்கு என்னவள் தான் முக்கியம் யாரோ ஒருவள் முக்கியமில்லை.

என்னால் என்னதான் செய்துவிட முடியும். விதி இதுதான் என்று விதித்துள்ள போது...

என் உயிரையும் என்னை நம்பி என் கைப்பிடித்து என்னோடு வந்த என்னவள் உயிரையும் பனையம் வைத்து  இதோ கொடூரமாக செத்துக் கிடக்கும்  இவளை காக்கவா முடியும்.

கவலையோடு அந்தப் பெண்னை இல்லை இல்லை பெண்ணின் கடலத்தை பார்க்கிறேன்.

ரத்தப் பசையற்ற சடலமோ வெளிரிப்போய் கிடந்தது சருகுகளின் மேல் ஆடைகள் இன்றி.

கண்களில் கசிந்த கருணை பார்வையுடன் உதட்டில் ஏளன புன்னகையுடன் வெறிக்கிறேன்.

மீண்டும் அருகில் உள்ள புதருக்குள் ஏதோ சலசலப்பது போல் ஒரு சத்தம்.

அதுதான் வருகிறது என்னால் உணர முடிகிறது அதன் வாசத்தை.

கண்களை இறுக மூடி கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.

அது அடங்குவதாக தெரியவில்லை என்னையே தாக்குவதற்கு துணிந்து விட்டது.

நான் ஒன்றும் சாதாரணமானவன் கிடையாது இதன் மிரட்டலுக்கு பயந்து உறைந்து நிற்க.  என்னை நோக்கி வந்த அதை கையும் களவுமாக பிடித்து விட்டேன்.

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭    Tempat cerita menjadi hidup. Temukan sekarang