நேசம் - 14

3 0 0
                                    

🎭 *பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...* 🎭

*நேசம் - 14*

பைக்கில் இருந்து இறங்கி கையை உயர்த்தி சோம்பல் முறித்து கொண்டே உடலை இரண்டு பக்கமும் ஆட்டி வளைத்து நேராக முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றேன்.
உடலில் இருந்த வெட்டு காயங்கள் அடங்காத எரிச்சலை தந்தன.
முகத்தில் சலனத்தை காட்டாமல் வலியை எனக்குள்ளே முழுங்கி கொள்கிறேன்.

நான் வந்ததை கண்டதும் எங்கிருந்தோ ஓடி வந்த நவீன் என் பின்னால் பார்த்துவிட்டு கேள்வியாக என்னை நோக்கினான்.

நான் அவன் விழிகளை பார்க்காமல்

" உங்களோட அக்காவை நான் வீட்ல டிராப் பண்ணிட்டு தான் வந்தன். என்னோட பைக் என்ன ஆச்சு"

" பைக்க மெக்கானிக் ஷாப்ல கொடுத்து இருக்கிறன் ஈவினிங் ரெடி ஆகும்னு சொல்லி இருக்காங்க சார்."

"ஓகே அந்த மர்டர் கேஸ் பைல கொடுங்க." அவன் கையில் இருந்த பைலை வாங்கிக் கொண்டு கமிஷனரை சந்திப்பதற்காக அவரது கேபின் சென்றேன்.

அங்கே அந்த கமிஷனர் மலை மாடு போன்ற தோற்றத்தில் காலையில் நான் தொண்டைக் குழியில் இருந்து நெஞ்சுக்குழி வரை போட்டுவிட்ட கீறலை மறைக்கும்படி காக்கி சட்டையை போர்த்திக் கொண்டு கம்பீரமாக ஒரு திமிர் கலந்த அலட்சியத்தோடு என்னை சுரத்தே இல்லாமல் வரவேற்றான்.

நான் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவன் அனுமதி இல்லாமல் அவன் எதிரே கால் மேல் கால் போட்டு என் முழு உயரத்திற்கும் நிமிந்து அமர்ந்த நான் அவன் எதிரே கொண்டு வந்த பைலை தூக்கி மரியாதையே இல்லாமல் போட்டேன்.

" இந்த கேஸ நான் எடுத்துக்கல. வேற யாருக்காச்சும் குடுங்க சார்" பல் இடுக்கில் ஒவ்வொரு வார்த்தையாக கடித்து துப்பினேன்.

அவன் எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினான்.

நானும் பெரிதாக வேறு எதுவும் பேசவில்லை அவன் விழிகளையே ஆழமாக பார்த்துவிட்டு மேசையில் ஒரு தட்டு தட்டி விட்டு எழுந்து நின்றேன்.

🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭    Where stories live. Discover now