🎭 *பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்...* 🎭
*நேசம் - 19*
என்னதான் அடி மனதில் பயம் கொட்டிக் கிடந்தாலும் இன்று பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.
பேசத்தான் போகிறேன் என் சத்தத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் சற்றே நகர்ந்திடட்டும்
வீட்டுக்குள் நுழைந்த அவனை கேள்விக்குறியோடு பார்த்த என் தந்தையை சிறிது கேலியோடு நோக்குகிறேன்.
நித்துவின் கால்களோ பரதநாட்டியமாட வியர்க்கும் முகத்தையும் துடைக்க வளமின்றி நின்றிருந்தாள்.
நவீன் முகத்தில் கொலை வெறி தாண்டவம் ஆட நித்துவை முறைத்துக்கொண்டு நின்றான்.
அவனின் கைகளை எனது கைகளுக்குள் பற்றி ஆசுவாசப்படுத்துகிறேன்.
என்னவனை மனதுக்குள் நிரப்பி கொண்டு அவன் அணிவித்துவிட்ட மோதிரத்தை வருடி கொண்டே என் தந்தையை நேருக்கு நேராகப் பார்த்து
" சொல்லுங்கப்பா இங்க என்ன நடந்துச்சு எதுக்காக கோவமா இருக்கிறீங்க"
கேட்டுக்கொண்டே அப்புதியவனை நோக்கி" உங்கள லவ் பண்ணி ஏமாத்தினது அதோ என்ன மாதிரியே நிக்கிறாளே அவள்தான் " நித்துவை கை காட்டுகிறேன்.
மற்றவர்களின் அதிர்ச்சியை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கையில் இருந்த மோதிரத்தை காட்டி
" அப்பா என்ன மன்னிச்சிடுங்க என்னால நீங்க சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்க முடியாது நான் எனக்கானவன கண்டுபிடிச்சிட்டன்
தயவுசெய்து இந்த தடவை ஆச்சும் நான் சொல்றத கேளுங்க "
என் தந்தையின் முகம் கோபத்தில் இறுக என் தாய் ஒரு படி மேலே போய் என்னை அடிக்க பாய்ந்து வந்தார்.
🎯🥀🎯🥀🎯🥀🎯🥀🎯🥀🎯🥀
என்னவன் அலுவலகத்தில் நவீன் உடன் பேசிக் கொண்டிருந்தபோது,
(குட்டி ஃப்ளாஷ் பேக் பிபோர் டூ ஹவர்ஸ்)
"அவள விடுக்கா நினைச்சாலே எனக்கு கோவம் வருது. நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும். காலையில நீ அந்த கொலை கேஸ் சம்பந்தமாக என்னமோ தெரியும்ன்னு சொன்னல. அது என்ன என்கிட்ட சொல்லன்"
VOCÊ ESTÁ LENDO
🎭 பிழைத்த உதிர கீறல்கள் பிழையா நேசத்தில்... 🎭
RomanceDisclaimer: ஒரு ஜாலியான லவ் ஸ்டோரி ரொம்ப பெருசாலாம் எதிர்பாக்காதீங்க 🤗 வழக்கம் போலதான் கொஞ்சமா த்ரில்லர், க்ரைம், ஃபேண்டஸி, கருத்தூசி எல்லாம் மிக்ஸ் பண்ண டெம்லேட்... 🤩 பிடிக்காதவங்க ஸ்கிப் பண்ணிடுங்க.